மை டியர் Fake ஐடீஸ் !!

0
98
d98884b26860d83d0c2132da6946ae33-702a205a

 

 

 

 

என் காகிதத்தில்
பறக்கும் அந்த
ஜோடிப்புறாவின்
எச்சத்தை எண்ணிப் பார்த்து
ஒன்று நீயெனில்
மற்றொன்று யாரென
துருவி ஆராயும் வேலை
உங்களுக்கு!!

நான் மூடிய கதவுகளுக்குப் பின்
ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின்
என் பார்வைகள் எட்டும் முன்னரே
முடிவு எழுதும் பதற்றம் உங்களது

இந்த வானம்பாடியின்
கானங்களைக் கேட்கும்போதெல்லாம்
இது சோகமா?
வெறுமையா?
காமத்தின் சாயலா?
என்றெல்லாம் வேவுபார்க்கும்
கொழுத்த ஐயம் உங்களுக்குள்

ஒரு மோப்பநாயினைப் போல்
என் கனவுகளை
குதறித்தள்ளக் காத்துக் கிடக்கும்
நீங்கள்…

என் பூமிப்பந்தை
அடிவானிலிருந்து சுருட்டி
மடியில் கொட்டி ஆராய்ந்து
என்னுள்
புதர்விலக்கித் துருவிக்
கண்டுபிடித்ததென்ன..? உங்கள்
குப்பைகளையன்றி

உங்கள் மூக்கின் நீளமறிந்து
இன்றும்
நானொரு கவிதை எழுதினேன்
அதிலேனும் என்னைத் தேடாதிருக்க!!

 

 

 

இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க