வண்ணவெறி

0
706

 

 

 

 

நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னே
நிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதே
செங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்ன
செருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன

சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்
சாமானிய பிறவியிலே சமவுடமை காண்பதில்லை
எழுத்தறிவில் ஏற்றம் கண்டு ஏமாந்து போவதென்ன
எண்ணங்களை வண்ணங்கள் எதிர்மறையில் நிறுத்தியதே

வெளித் தோலில் வெள்ளை நிறம் வெண் மனமாய் தோன்றிடுமோ
வெந்த கருந்தேகம் இழி மனமாய்க் காட்டிடுதோ

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க