பப்பாளி கூட்டு

0
2045

தேவையான பொருட்கள்:

பப்பாளிக்காய் – ஒன்று

தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பாசிப்பருப்பு – ஒரு கப்

பெருங்காயத்தூள் – சிறிதளவு

கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Papaya Kootu
Papaya Kootu

செய்முறை:

  • பப்பாளிக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு சேர்த்து வேகவைக்கவும். பாசிப்பருப்பை லேசாக வறுத்து குழைவாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
  • காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய்த் துருவலை சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
  • இதனுடன் வேகவைத்த பப்பாளிக்காய், வேகவைத்த பாசிப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். கடுகு, உளுத்தம்பருப்பை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

நன்மைகள்:

  • சிறு நீர் போகும் குழாயில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் பப்பாளி உதவுகிறது. எலும்பு நல்ல முறையில் வளரவும் உபயோகமாகிறது. குழந்தைகளுக்கு பல் சரியாக வளராமல் இருந்தால் இப்பழத்தை சாப்பிட கொடுக்க வேண்டும். கண்கள் அழகாக இருக்கவும் இளமை நீடிக்கவும் பப்பாளிப்பழம் சிறந்தது. 
  • வாய், மூக்கு, உணவு மண்டலம், கழிவு மண்டலம் போன்ற பாகங்களில் உள்ள தோலிலும் சிலேட்டுமம் படலத்திலும் திசு பாதிப்புகள் நோய்க்கு பப்பாளி பெருமளவு பயன்படுகிறது.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க