டொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable facts about Donald Trump)

0
1021

டொனால்ட் ட்ரம்ப் ஓர் அமெரிக்க தொழிலதிபர், தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார். மேலும் 500 வணிக அமைப்புக்களைக் கொண்ட டிரம்ப் அமைப்பின் தலைவர்.

மேலும் பல அறிந்திராத சுவாரஷ்யமான தகவல்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

1. டொனால்ட் ட்ரம்ப் தனது இளம் வயதில் மோசமான நடத்தைக்காக இராணுவ பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.2. அவர் ஒரு கைகுலுக்க விரும்பாத ஜெர்மாபோப் நபர் (Germophobe). அதாவது கிருமிகளைப் பற்றி தீவிர பயம் கொண்டவர் மற்றும் தூய்மையை எப்போதும் விரும்பும் ஒரு நபர்.

3. ட்ரம்ப் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் மீது ஒரு காலத்தில் நீதித்துறையால் இனரீதியாக பாகுபாடு காட்டப்பட்டது என்பதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டது. ஏனெனில் ட்ரம்ப் மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விட மாட்டார்கள்.

4. 1990 ஆம் ஆண்டில் கோஸ்ட் கான்ட் டூ இட் (Ghosts can’t do it) படத்தில் நடித்ததற்காக டொனால்ட் ட்ரம்ப் மோசமான துணை நடிகருக்கான ரஸ்ஸி (Razzie) விருதை வென்றார்.5. ட்ரம்ப் தனது தந்தையை குரங்கு என்று அழைத்ததற்காக பில் மகேர் மீது வழக்குத் தொடர்ந்தார்.

6. ட்ரம்ப் மது அருந்துவதில்லை. ஆனால் அவரது சகோதரர் ஒரு குடிகாரர் மற்றும் 1982 இல் குடிக்கு அடிமையாகி இறந்தார்.

7. டிரம்ப் 27 வயதிற்குள் 14,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் வைத்திருந்தார்.

8. டொனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘தி அப்ரண்டிஸ்’ பெரிதாக பிரபல்யமடைந்தது. அதற்காக அந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் 375000$ வழங்கப்பட்டது.

9. ட்ரம்ப் மீது தனது வணிக பங்காளர்கள், ஒப்பந்தக்காரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் வங்கிகள் என்பன ட்ரம்ப் மீது 3,500 முறை வழக்குத் தொடுத்துள்ளன.

10. ட்ரம்பின் தலைமுடி உண்மையானது. அவர் தனது மனைவி மெலனியாவிடம் முடி வெட்டுகிறார்.

11. டொனால்ட் ட்ரம்ப் ஜெர்மன் மற்றும் ஸ்காட்டிஷ் (German & Scottish) வம்சாவளியைச் சேர்ந்தவர்.

12. அவரது குடும்பத்தின் பெயர் Drumpf அல்லது Drumpft என்பதேயாகும். ஆனால் 1600 களில் முப்பது ஆண்டுகால போர் ஏற்பட்டபோது டிரம்ப் என்று அவர் பெயர் மாற்றப்பட்டது.

13. ட்ரம்ப் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் உள்ள ஃபோர்டாம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். மற்றும் 1968 இல் வார்டனில் பொருளாதாரத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

14.டொனால்ட் ட்ரம்ப் உலகம் முழுவதும் சுமார் 18 கோல்ஃப் மைதானங்களை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார்.

15. ட்ரம்ப் 2001 மற்றும் 2009க்கு இடையில் ஒரு பதிவு செய்யப்பட்ட ஜனநாயகவாதியாக இருந்தார்.

16. ட்ரம்ப் தனது சொந்த சொத்துக்களுக்காக வங்கியில் ஒருபோதும் திவால் நிலைக்கு உள்ளானதில்லை. ஆனால் 1991 மற்றும் 2009 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தனது வணிக சொத்துக்களுக்காக திவால்நிலைக்கு உள்ளாகி ஆறு முறை பதிவு செய்துள்ளார்.

17. ஹோம் அலோன் 2: லாஸ்ட் இன் நியூயார்க்கில் டிரம்ப் ஒரு சிறிது நேர கதாபாத்திரத்தில் நடித்தார்.

18. ட்ரம்பின் பெற்றோர் பணக்காரர்களாகக் கருதப்பட்டாலும் ட்ரம்ப்பின் குழந்தைகள் அனைவரும் சிறு வயதிலேயே பாடசாலையின் பின்னர் வேலைகளைச் செய்தனர்.

19. டொனால்ட் ஒரு மல்யுத்த பொழுதுபோக்கு ரசிகர்(World Wrestling entertainment fan)

20. 1999 ஆம் ஆண்டில், ட்ரம்ப் 10 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள வருமானமுள்ள நபர்கள் மீது 14.25% அறவிடக் கூடிய வரி முறையொன்றை முன்மொழிந்தார். இதன் மூலம் 5.7 டிரில்லியன் டாலர் திரட்ட முடியும் என்றும் இது தேசிய கடனை அழிக்கச் செய்யும் என்றும் கூறினார்.

Source : seriousfacts.com

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க