கேழ்வரகு தோசை

0
1539

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு மாவு – 2 கப்

அரிசி மாவு – ஒரு கப்

பச்சை மிளகாய் – 4

நாட்டு வெங்காயம் – 12

பெருங்காயத் தூள் – ஒரு
தேக்கரண்டி

புளித்த மோர் – 50 மில்லி

 உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • மிக்ஸியில் பச்சை மிளகாய் மற்றும் நாட்டு வெங்காயத்தைப் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.
Ragi Dosa
  • அரைத்தவற்றுடன் மோர், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு அதனுடன் அரிசி மாவையும், கேழ்வரகு மாவையும் போட்டுக் கலந்து கொள்ளவும்.

 

Ragi Dosa
  • மாவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மெல்லிய தோசைகளாக ஊற்றி, மேலே சிறிது எண்ணெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும்.
  • சுவையான கேழ்வரகு தோசை தயார்.

குறிப்பு: ‘ராகி’ சத்து மிகுந்தது என்பதற்காக அதனை உடனடியாக அடிக்கடியும் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதனை படிப்படியாக வயிற்றுக்கு பழக்க வேண்டும். முதலில் மாதம் இரு முறை எனவும் பிறகு மூன்று முறை எனவும் ஆரம்பிக்க வேண்டும். ராகியில் களி ஒன்று தான் செய்ய முடியும் என்றில்லை. ராகியில் பலவிதமான உணவுகள் செய்யலாம். இவ்வாறு செய்வதால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

நன்மைகள் :  ரத்தம் சுத்திகரிக்கும் – எலும்பு உறுதிப்படும் –  சதை வலுவாக்கும் – மலச்சிக்கல் ஒழியும் –  அதிக நேரம் பசி தாங்கச் செய்யும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க