கேழ்வரகு கூழ்

0
1883

தேவையான பொருட்கள் :

      கேழ்வரகு மாவு – அரைகிலோ

      நொய் (பச்சரிசி) – 200 கிராம்

      சின்ன வெங்காயம் – 3  

      தயிர் – இரண்டு கப்

      உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் கேழ்வரகு மாவு 2 ஸ்பூன் தயிர் சிறிது உப்பு மூன்றையும் 2 டம்ளர் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கரைத்து முந்தின நாள் புளிக்க வைக்கவும்.
Fine millet colloid
  • மறுநாள் குக்கரை அடுப்பில் வைத்து நான்கு அல்லது ஐந்து ஆழாக்கு தண்ணீர் விட்டு பச்சரிசி நொய்யைக் அதில் போட்டு 2 விசில் விட்டு வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் புளித்த கேழ்வரகு மாவினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு மத்தின் பின்புறத்தினால் கலந்து விடவும். கையில் தண்ணீர் தொட்டு வெந்து விட்டதா என்று பார்க்கும்போது மாவு கையில் ஒட்டாமல் வந்தால் இறக்கி விடவும்.
Fine millet colloid
  • இதனை இரவில் செய்து வைக்கவும்.
  • காலையில் அந்தக் கூழினை ஒரு பாத்திரத்தில் போட்டு அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு, தயிர், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து விடவும் குளுமையான கூழ் தயார்.
  • இந்ந கூழினை அப்படியே கெட்டியாக சாம்பார் அல்லது கருவாட்டு குழம்புடன் சாப்பிட்டால் இதன் ருசி நாக்கிலேயே இருக்கும்.

நன்மைகள் : இந்தக்கூழ் உடலுக்கும் குளுமை தருவதோடு சக்தியும் அளிக்கும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க