காத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..

0
914

 

 

 

 

காத்திருப்பதே என் விதியாகிவிட்டது…

என் வாழ்க்கைப் பயணத்தில்
உனைச் சந்திக்கும் வரை
காத்திருப்பு…
அறிமுகமான பின் தினமும்
உன்னுடன் பேசும் நொடிகளுக்கான
காத்திருப்பு…
அனுப்பிய செய்திகளுக்காய்
பதிலை எதிர்பார்த்தபடியும்
காத்திருப்பு…
மனதில் மொட்டவிழ்ந்த காதலை
சொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்
காத்திருப்பு…
தெரிந்த போது என்னவாகுமோ இந்த உறவின் நிலையென்ற ஏக்கத்தோடு
காத்திருப்பு…
என் கால அவகாசம் விளிம்பைத்
தொட்டபோது தொற்றிய பதற்றத்தோடு
காத்திருப்பு…
உன் வார்த்தைகளில் நிலைகுலைந்து
நின்ற போது வராத கண்ணீருக்காகவும்
காத்திருப்பு…
மீண்டும் கிடைக்காதோ அந்த நாட்கள்
என்ற தவிப்போடு அன்று முதலாய்
காத்திருப்பு…

கடைசி நொடியிலேனும் மாறாதா
அவன் மனமென மன்றாடியவாறே
மணவாளனாய்க் கரம்பற்ற வேண்டியே
மீண்டும் தொடங்கியது
முதலில் இருந்த அதே
நீண்ட நெடும்
காத்திருப்பு…

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க