கற்றவை பெற்றவை

0
944

 

 

 

வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்…!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த கோவிட் Covid) காலத்தில் அதிகமாவே உணர முடியுது.

இந்த 2020 வரை பயணப்பட்டிருக்கும் நாம் பகிர்ந்துக்க எவ்வளவோ அனுபவங்கள் இருக்கும். எதை செய்யணும், எதை செய்யக்கூடாது, எதை எப்படி செஞ்சா இன்னும் சிறப்பாக இருக்கும்னு வாழ்க்கை பாடம் விளக்கியிருக்கு நமக்கு. இந்த வருஷம் அதிகமா நான் கத்துக்கிட்ட விஷயம் நம்மோட தெரிவுகளில் முதன்மையாக ஆரோக்கியமும் சேமிப்பும் இருக்கணுங்கிறது. அதை விட அதிகமா நம்ம மட்டுமில்லாம நம்மை சுத்தியிருப்பவங்களையும் கவனிக்கணுங்கிறது.

நம்ம லைப் எந்த புள்ளியில் மாறும்னு தெரியல. அது பல நேரம் நமக்கு சிறப்பையும் சில நேரம் இழப்பையும் தரலாம். வாழ்க்கை அப்படித்தான். இயன்றவரை சிறு உதவிதானேனு செய்யத்தயங்கி நிற்காதீங்க. எப்போதுமே எறும்புக்கு பருக்கை சோறுதான் வயிற்றை நிறைக்குது. ஆதலால் தயக்கம் என்பதை எந்த விஷயத்திற்குமே காட்ட வேண்டாம்.

 

 

 

 

 

அடுத்தது, எப்போதுமே ஆம்-இல்லை முடியும்-முடியாது கற்றுக்கொள்கிறேன் என்ற வார்த்தைகளை தெளிவாக கவனமாக பயன்படுத்துங்கள். முக்கியமாக முகத்திற்கு முன்னர் தெளிவாக குழப்பமில்லாமல் கருத்துக்களை முன்வைத்திட கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக யாரையும் சார்ந்து நிற்கவேண்டாம். நமது கைகளும் கால்களும் புத்தியும் நம்வசம் வைத்துக்கொள்வதே அதிகம் சிறந்தது.

உங்களுக்கென்று தனிப்பட்ட இலக்கை வகுத்துக்கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைவதற்குரிய காலத்தையும் நீங்களாகவே மதிப்பீடு செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் செய்கின்ற செயல்களின் பெறுபேற்றினை நீங்களே அளவிடுங்கள். உங்களை மதிப்பீடு செய்யும்படி பிறரை வேண்டாதீர்கள். இலக்குகள் எப்போதுமே பெரியனவாகவே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. தினமும் காலையில் 05 மணிக்கு எழ முயற்சிப்பது கூட உங்கள் இலக்காக இருக்கலாம்.

எப்போதும் உங்கள் செவிகளை பிறரின் கருத்துகளை அறிய செவிசாயுங்கள். அவர்களின் எண்ணங்களை, அனுபவங்களை அவர்களின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப் பழகுங்கள். ஆனால் உங்கள் முடிவுகளை ஆய்ந்து அறிந்து தீர்மானமாய் எடுத்திடுங்கள். எடுத்தபின் நிறைவேற்ற தயக்கம் காட்டாதீர்கள்.

ஒருவரின் மீது நம்பிக்கையும் அன்பும் நீங்கள் வைப்பதைப்போல பிறரும் உங்கள் மீது வைத்தே தீர வேண்டும் என எதிபார்க்காதீர்கள். நீங்கள் உங்களுக்கு நெருக்கமாக இருந்தாலே போதும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக்கொண்டால் போதும். உங்களின் தவறுகளிலிருந்து பாடங்களை நீங்களாகவே கற்றுக் கொண்டால் போதும். மாற்றம் என்பதுதான் எப்போதும் மாறிக்கொண்டிருக்குமே….!!!

இன்னும் எவ்வளவோ சொல்ல முடிந்தாலும் சுருக்கமாக சொல்வதும் சிறப்புதான்னு இந்த வருஷம் கற்றுத்தந்திருக்கு. இதுபோல நீங்க கற்ற விஷயங்களையும் கமன்ட்டில் பகிரலாம்…!!! Thanks for everything and everyone who taught us different perspectives to lead our life and Let’s welcome 2021 with positive mind and full of love… எல்லோருக்கும் மலரும் ஆண்டு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொண்டு வருவதற்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் போராடக்கூடிய துணிவை அனைவருக்கும் வளர்ப்பதற்கும் ப்ரார்த்திக்கின்றேன். 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க