உளுந்து வடை (Urad Dhal Vada)

0
2277

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்

பச்சை மிளகாய் – 3

பெருங்காயம் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு 

நன்மைகள்: கடும் நோயில் இருந்து மீண்டவர்களுக்கும், உடல் பலவீனமானவர்களுக்கும் உளுந்து ஒரு வர பிரசாதம்.  

Urad Dhal Vada
Urad Dhal Vada

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.
  • கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.
  • மாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக, அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)

நன்மைகள்: உளுந்து வடை பசியைப் போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும். உளுந்து வடையில் உளுந்து அதிகம் இருப்பதால் இடுப்பு வலுவடைவது மட்டுமல்லாமல் இடுப்பு வலி நீங்கும். 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க