இள வயதுக் கூன்

0
1008

பத்துப் பிள்ளை சுமக்கவும் இல்லை
பாலூட்டி சீராட்டி வளர்க்கவுமில்லை
பத்தாம் தரம் படிக்கும் உனக்கு
படிப்பு முடிவதற்குள் எப்படி கூன் விழுந்தது


இரண்டு பத்துப் பேரிற்கு சமைத்ததுமில்லை
ஈரைந்து பாத்திரங்கள் கழுவியதும் இல்லை
இப்படி நீ இருக்க இவ் வயதில்
இள வயதுக் கூன் எப்படி விழுந்தது

நீ செல்வது உதாரணப் பெண்கள் வழியா! – இல்லை
நீ இங்கு ஏதேனும் கூன் வேடம் போட்டாயா
எதுவும் இல்லை எனும் போது
என் தோழியின் கூன்முதுகின் காரணம் என்னவோ?

புரிந்து விட்டது உன் கூனின் காரணம்
பாலகனாய் நீ இருந்த போதே
பள்ளிக்கூடம் செல்கையில் பத்துப் புத்தகம் சுமந்தாயே
உன் இள வயதுக் கூனிற்கு இதுவே காரணம்

முந்தைய கட்டுரைராட்சஷி
அடுத்த கட்டுரைஇது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 01)
எனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு எழுத்துத் துறையில் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து வருகின்றேன். எனது ஆக்கங்களில் சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளதோடு இன்னும் சில razathawrittingblogspot.com என்ற எனது பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துக்களின் மூலம் சமூகத்திற்கு சில செய்திகளைத் தெரிவிப்பதே எனது நோக்கமாகும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க