இது உங்களது பிரச்சினை மட்டும்தான்!

1
1524

 

 

 

 

 

 

Stress எனும் சொல் உங்களுக்குப் புதிதல்ல. அதனை உள அல்லது உடல் ரீதியானதொரு பதற்ற நிலை  என்று கூறலாம்.அதனூடான reaction ஆனது positive ஆகவோ அல்லது Negative ஆகவோ இருக்கலாம்.

That’s all about your mind…!!

அதிகமானவர்கள் Stress என்பதை உள்ளார்ந்த பிரச்சினையாக அடையாளப்படுத்துவதுண்டு.ஆனால் உள்ளார்ந்த உணர்வு வெளியுலகை சந்திக்கும் போதுதான் Stress தோன்றுகிறது.

ஒரு மனிதன் Stress நிலைக்குத் திரும்பும் போது அவனை அறியாமலே அவனது பிரச்சினைகளை சமூகம் அள்ளிக்கொள்ளும்.அதாவது அவனது திரும்பலடைந்த மனநிலையைப் போக்க அவன் தனது பிரச்சினைகளை மற்றவர்களுக்குக் கூறுவதனூடாகத் தெளிய முனைகிறான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அதாவது,Stress நிலையில் உரிய நபர்களை அணுகுவதில் பிழைக்கிறான்.அது அவனுக்கு மேலும் அவநம்பிக்கையையும் பிரச்சினைகளையும் இரட்டிக்குமே தவிர அதனை விட்டும் வெளியேற அவனுக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை.

இந்த உலகில் தீர்ப்பு வழங்குபவர்கள் அதிகம்.அதிலும் குறிப்பாக பிரச்சினைகளுக்கான தீர்வு வழங்குபவர்களை விட சூழ்நிலைகளுக்குத் தீர்ப்பு வழங்குபவர்களே மிக அதிகம்.

உண்மை யாதெனில் , இங்குள்ள மனிதர்கள் யாருக்கும் அவர்களது பக்கத்திலிருந்து பார்த்ததனை/பார்ப்பதனைத் தவிர உங்களது சூழ்நிலைகளை அறிவதற்கான வாய்ப்பே இல்லை.

 

 

 

 

 

ஆக,சிறந்த தீர்வு வழங்கக்கூடியவர்களைத் தவிர வேறு யாரும் உங்களது பிரச்சினைகளை அறியக்கூடாது. மற்றையது,பொதுவாகவே ஏனையவர்களுக்கு அது  ஒரு தலைப்பு மட்டும்தான். அதாவது,அது அவர்களுக்கு  அவசியமற்றது எனின், உங்களைப் பற்றி அறியாதவர்கள்,அவசியமற்றவர்களுக்கெல்லாம் அவற்றை தெரியப்படுத்துவதனை விட்டும் தவிர்ந்துகொள்ளுங்கள்.உங்களது Stress (விரக்தி/மன அழுத்தம்) உங்களை சார் சமூகத்தின் கண்ணாடியாகிவிடாமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் அது உங்களது பலவீனத்தை பிறருக்கு விம்பமாகக் காட்டும். சமூகம் உங்களது பலவீனத்தை அளந்துகொண்டால் நீங்கள் இருக்கும் இடத்தினை உங்களையே மறக்கடிக்கச் செய்யும்.

Stress இனை கையாளத் தெரியாத பலர்  உலகினை விட்டும் விரண்டோட முனைந்துகொண்டும் முனைந்தும் இருக்கின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

But,உங்களது வாழ்க்கையில் எந்த விடயம் சீரியஸான ஒரு பிரச்சினையாகவோ,புயலொன்றோ ஏற்படும் என்று உணரும் பட்சத்தில் உங்களது உள்ளம்

“I’m sure it’ll be fine!”

என்று உரத்துச் சொல்ல வேண்டும்.இங்கு பிரச்சினை என்னவென்றால் உங்களுக்கான தீர்வை உலகம் சொல்லும் வரை காத்துக்கொண்டிருப்பதுதான்.

 

 

 

 

உங்களது பிரச்சினைகளை உலகறியச் செய்ய முன் ஒரு கனம் சிந்தியுங்கள்!!

ஏனெனில்,

இது உங்களது பிரச்சினை மட்டும்தான்!!

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
1 கருத்து
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Shafiya Cader
Shafiya Cader
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

True