ஆயிரங்களின் அன்னை

0
2190

பிரையோபில்லம்- Bryphyllum daigremontianum (synonym-Kalanchoe daigremontiana ) ஒருசதைப்பற்றுள்ள, கிரேசுலேசியே (Crassulaceae) குடும்பத்தைச்சேர்ந்த தாவரம். மடகாஸ்கரை பிறப்பிடமாககொண்ட இது ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், மற்றும் ஹவாய் ஆகிய  இடங்களில் பரவி உள்ளது. இந்தியாவில் இச்செடி இமாச்சலப்பிரதேசத்திலிருந்து அனைத்துபாகங்களிலும் காணப்படுகின்றது. மருந்துக்காக பல இடங்களில் சாகுபடியும் செய்யபப்டுகின்றது.

Tamil: மலைக்கள்ளி, ரணகள்ளி

Telugu: சிம்மாஜமுடு

Malayalam: இலைமுளைச்சி

English: Sprout leaf plant. Air plant, Life plant, Miracle leaf,  Donkey Ears, Deathless plant and Mother of thousands

மிக வேகமாக வளரும் இயல்புடைய இச்செடி ஈரமான மண்ணில் நன்குசெழித்து 3-6 அடி வரை வளரும். நேரான, சதைப்பற்றுள்ள இதன் தண்டுகளிலிருந்து அகன்ற, வளைவுகளுள்ள விளிம்புடன் 10செமீ நீளமுள்ள இலைக்காம்பின் மீது. 3லிருந்து 5 வரையிலான தடிமனான கூட்டு இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும்.  பார்ப்பதற்கு மனிதநாக்கைப் போல் காணப்படும் இலைகளின் விளிம்பு மடிப்புகளிலிருந்து நூற்றுக்கணக்கான புதிய சிறுநாற்றுக்கள் உருவாகும், சதைப்பற்றுள்ள இலைகள் என்பதால் செடியிலிருந்து உதிர்ந்த இலைகளிலிருந்து கூட இவ்வாறு பல நாற்றுக்கள் தோன்றும்.

 

 

 

 

 

ஒரு நூலில் ஒற்றை இலையைக் கட்டித் தொங்கவிட்டு அதிலிருந்து பலசிறுசெடிகள் வளர்வதை கிராமப்புறங்களில் சிறுவர்கள் செய்து பார்ப்பது வழக்கமென்பதால் இதற்கு “கட்டிப்போட்டால் குட்டிப்போடும் செடி” என்ற வட்டாரச் சிறப்புப்பெயரும் உண்டு.  ஒரு இலையிலிருந்து நூற்றுக்கணக்கிலும், ஒருசெடியிலிருந்து ஆயிரக்கணக்கிலுமாய் நாற்றுக்கள் முளைத்து இலைகளிலேயே ஒட்டிக்கொண்டுமிருப்பதால் இச்செடிக்கு ஆயிரங்களின் அன்னை( mother of thousands )    என்றும் பெயருண்டு.

செடியின் மத்தியிலிருந்து தோன்றும் கிளைகளுள்ள பூக்காம்பில் கொத்தாக  , தொங்கும் சிறியமணிகள் போன்ற இளஞ்சிவப்புமலர்களுடன் பூங்கொத்து இருக்கும்.

மிகமெல்லிய ,எடையற்ற  15 மிமீஅளவுள்ள இதன் கனிகளின்  4 அறைகளில் மிகச்சிறிய மண்நிற விதைகள் இருக்கும். இச்செடிவிதைகள் மூலமாகவும் இலைகளின் ஓரத்தில் முளைக்கும் சிறுசெடிகள் மூலமாகவும் இனப்பெருக்கம் செய்யும்

இதன் வேர், தண்டு, இலைகள் ஆகியவை சிறுநீரக தொற்றுகளுக்கும், சர்க்கரைநோய்க்கும் பித்தப்பைக்கற்களுக்கும், ரத்தக்காயங்களுக்கும் மருந்தாக பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அழகுச்செடியாகவும் வீடுகளில் பிரையோபில்லம் வளர்க்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க