குறிச்சொல்: கவிதைகள்
அதிசயப்பிறவி அவள்
மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு
எளிதானவைதான் அவள் புன்னகைகள்...
நீ என்றால்………….
நீ மேகம் என்றால்
நான் மழை ஆகின்றேன்
நீ மழை என்றால் - அதில் நான்
நனைந்திடுவேன்
நீ உயிர் என்றால்
நான் உடல் ஆகின்றேன்
நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
விருப்பப் பாடல்
தனிமை ஆட்கொள்ளும்
கருப்பான பிந்தைய இரவுகளில்
என் அத்தனை விருப்பப் பாடல்களும்
நீதான்...
நாளையும் விடியுமா…??
இரவின் கோரப்பசி
என் தூக்கத்தை
முழுமையாய் விழுங்கி
தேவையற்ற எண்ணங்கள்
பலதை ஏப்பம் விட்டது...
நிலவொளியில்
காய்ந்து கிடக்கும்
எனை கட்டித்தழுவிய
அமைதிக் காற்று
ஆரவாரமற்று
தாலாட்ட
முயற்சித்தும்,
முறையற்ற
எண்ணம் பல
எட்டிப்பார்த்து,
மூடிய விழிகளில்
முழுவதும்
கற்பனையாய்
நாளைய
விடியலில்
நிம்மதி கிட்டுமோ என
மின்னும் உடுவுடன்
ஓசைகளற்ற பேச்சுடன்
மணி முள்ளும்
நிமிட முள்ளும்
போட்டி போட்டு
சுழன் றோட
இன்றும் விடியவில்லை
என்ற ஏக்கத்தோடு
மறு ஒரு நாள்
கழிக்கிறேன்....
உருகும் உணர்வுகள்
உறைந்து போன
விருப்பங்கள் அனைத்தும்
இதயத்திலிருந்து
குருதியுடன்
ஒரு கலமாய்
உடம்பெங்கும் பரவி
உயிரற்ற பிணமாய்
உலகில் பவனி வந்து
குறுஞ் சிரிப்பும்
சிறு குறும்பும்
சிலர் மீது சிதறி
மீண்டும் மரணிக்கச்
செல்கிறது...
புதுமையில்லா
புரிதலுடன்....