வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு

0
900

 

 

 

 

 

இனிமையான காலைப்பொழுது
நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன்
இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில் முத்தமிடுகின்றாள்
வித்தியாசமான சத்தங்கள் செவி வழியே ஊடுருவுகின்றது
ஆமாம் நகரமயமாகிவிட்ட உலகில் பறவைகளின் கானம் கூட வினோதமாகத்தான் உள்ளது
தினமும் கேட்கும் ஒன்றுதான் இன்றுதான் உற்று நோக்க நேரம் கிட்டியுள்ளது
இயந்திரதனமான வாழ்கையில் வார இறுதிதான் வாழ்க்கையை மீட்டிப்பார்க்க உதவுகின்றது

தேனீரை பருகிக்கொண்டே வாழ்நாளை மீட்டிப்பார்க்கின்றேன்
கடந்த சில நாட்களாக அதிகமான மன அழுத்தங்களை மனமானது சந்தித்து வருகின்றது
காரணங்களை தேடிப்பார்க்க காலமும் நேரமும் இடம் கொடுக்கவில்லை
ஓயாத ஓட்டம் கூட வாழ்க்கையை நிம்மதி இழக்க செய்யலாம்
எண்ண ஓட்டங்களுக்கு இடையே மனமானது நிகழ்காலத்தை விட்டு கடந்த காலத்திற்குள் பயணிக்கின்றது

வாழ்க்கை எத்தனை வித்தியாசமானது
வாழும் காலம் முழுதும் எத்தனை அத்தனை உறவுகளும் பிரிவுகளும் ஒரு பத்து வருசத்துக்கு முதல் என்கூட இருந்த எல்லாரும் இப்போ இருக்காங்களான்னு கேட்டா கண்டிப்பா ஆன்சர் இல்லன்னு தான் வரும். ஆனா அந்த தொலஞ்சி போன அத்தனை உறவுகளையும் புதிதாக வந்தவர்கள் நிரப்பி விட்டிருப்பர்.
ஆனால் சிலரோட இடத்தை மட்டும் எப்போவும் யாராலையும் நிரப்ப முடியாது.
நம்ம ஒரு வீட்ட எவ்வளவு நிரப்பமா கட்டிட்டும் ஒரு செங்கல்ல மட்டும் வைக்காம விட்டுடுங்க வார போர எல்லோருமே அந்த இடத்துல ஏன் செங்கல் வைக்கலன்னுதான் கேப்பாங்க நீங்க வெச்சி கட்டின நூறாயிரம் செங்கல்ல விட வைக்காம விட்ட ஒரு செங்கல்லுக்குத்தான் பெறுமதி அதிகம் அதுதான் நம்மளோட மென்டாலிட்டி
அப்புடித்தான் நம்மட மனசும் ஆயிரம் விசயம் கிடச்சி இருந்தாலும் கிடைக்காத ஒரு விசயத்துல தான் மும்முரமா நிற்கும்
இதுக்கு என்னதான் தீர்வு??

நீங்கதாங்க தீர்வு
அட என்னங்க புரியலையா??
சிம்பிள் லொஜிக் சொல்ரேன்
நினைவு தெரிஞ்ச நாளுல ஒரு நாள் சரி எத பத்தியும் கவலப்படமா ஒரு நாளை சரி வாழ்ந்து இருக்கீங்களா??
அப்புடி யாருமே இருக்க மாட்டாங்க தூங்குரதுக்கு 5 நிமிசத்து முதல் சரி ஏதாச்சும் ஒரு கஷ்டத்த நெனச்சிட்டுத்தான் தூங்கிருப்பீங்க
அதுதான் வாழ்க்கை
இந்த வாழ்க்கையே ஒரு சோதனைதான் இந்த சோதனைய கடந்தாத்தான் சொர்க்கம் முக்தி எல்லாமே கிடைக்கும்
இந்த வாழ்க்கை என்டுர வட்டத்துக்கு பின்னாடிதான் நம்மட மோட்சம் இருக்கும்
அந்த மோட்சத்தை அடைய நம்ம கொஞ்சம் கஷ்டப்படத்தான் வேணும்
மனசு வலிக்கும் தான் வாழ்க்கை வெறுக்கும் தான் ஆனாலும் வாழ்ந்துதான் ஆகனும்
பொறுத்தார் பூமியாள்வார்ன்னு சும்மா சொல்லல முதல்ல கடவுள நம்புங்க
அவரு எனக்கு சரியானத சரியான நேரத்துக்கு தருவார்ன்னு நம்புங்க
எத்தனையோ பேரு குருடரா இருக்குரப்போ இந்த கட்டுரையா வாசிக்குரதுக்கு உங்களுக்கு பார்வைய தர தெரிஞ்ச கடவுளுக்கு எத்தனையோ பேரு ஊனமா இருக்க உங்களுக்கு ஆரோக்யத்த தர முடிஞ்ச கடவுளுக்கு ஒரு சரியான உறவை தர முடியாதுன்னு நினக்குரீங்களா மக்காள்??

நான் ஒரு சரியான உறவை தேர்வு செய்தேன் அத கடவுள் எடுத்துகிட்டார்ன்னு சொல்லுரீங்களே உங்களுக்கு எப்படி தெரியும் அது உங்களுக்கு சரியான உறவா இல்லையான்னு??
சரியான உறவுகள்ன்னா அங்க ஏன் பிரிவுகள் வருகின்றது??
அவங்க உங்கட பிறப்புல இருந்து கூட இருந்தவங்களா??
இல்லையே இடையில வந்த உறவுதானே அந்த உறவுக்காக கடவுள் பிறப்புல இருந்து உங்களுக்காக தயாராக்கி தந்த பெற்றோர்களையே விட்டுட்டு போக துணியுரீங்களே….??
அந்த இடையில வந்த உறவுகள் இடையிலையே போய்டாங்கன்னு இந்த பெறுமதியான உயிரை மாய்த்து கொள்ள துணியுரீங்களே??
இதெல்லாம் ஏன்??
உங்கட ஈமான்ல உங்கட கடவுள்ள உங்களுக்கு நம்பிக்கை இல்ல
உங்களுக்கு நல்ல வாழ்க்கைய படச்சவரு தருவார்ன்னு நம்பிக்கை இல்ல
அப்போ முக்தி, சொர்க்கம் இதெல்லாம் கிடைக்கும்ன்னு எதிர்பாக்காதீங்க…

அடுத்த கேள்விதான்
சேராத ஒரு உறவு மேல நமக்கு ஏன் ஈர்ப்பு வருது அதுக்கு காரணம் முதல்லையே சொல்லிட்டேன் வாழ்க்கை ஒரு சோதனை
இந்த வாழ்க்கையும் அற்பம் அதுல வார உறவுகளும் அற்பம் இந்த அற்ப வாழ்க்கையை விட்டுட்டு என்னைய நெருங்கி வா உனக்கு முக்திய தாரேன்னு சொல்லுர தாரக மந்திரம் தான் மக்காள்
இந்த உறவுகளின் பிரிவு
ஒரு உறவு பிரியுதுன்னா மகிழ்ச்சி அடையுங்கள்
ஏன்னா அது உங்களுக்கானது இல்லை உங்களுக்கான உறவு தயாராகி கொண்டிருக்கின்றது
இந்த பிரிவும் மன அழுத்தமும் உங்களை பலமானவர்களாக்கும் சக்தி
வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் தாங்குர பலத்தை அது உங்களுக்கு தரும்
So விட்டுட்டு போனவங்கள விட்டுட்டு சுத்தி இருக்குரவங்கள பாருங்க
எப்போவும் யாருக்கும் depend ஆகி இருக்காதீங்க அப்போதான் யாரோட பிரிவும் விலகலும் உங்களை பலவீனப்படுத்தாது
இங்க எனக்கு கஷ்டமே இல்லன்னு சொல்லுரவங்க யாருமே இல்ல எல்லார்ட வாழ்க்கைலயும் நின்று திரும்பி பார்த்தால் அழுகையால் ஆராதித்த தருணங்கள் இருக்கத்தான் செய்யும் அதை அந்த இடத்துலயே வெச்சிட்டு உங்களுக்கான உறவுகளை நோக்கி பயணத்தை தொடருங்கள்
காலம் நிச்சயம் அனைவரதும் காயமாற்றும்

இது காயப்பட்ட ஒரு நண்பியின் வேண்டுகோளுக்கு எழுதினது

நல்லது இருந்தா எடுத்துக்கொள்ளுங்கள்…

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க