முசுக்கொட்டை (Mulberry)

11
3690

முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான ’மோரேசியே’வைச்சேர்ந்தது (Moraceae). மல்பெரியில் பல சிற்றினங்கள் இருந்தாலும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பட்டு உற்பத்தியிலிருக்கும்  சைனாவில் வளர்க்கப்படுவது வெள்ளை மல்பெரி, Morus alba (alba = white). மட்டுமே. பிற நாடுகளில் அதிகம் வளர்க்கப்படும் சிற்றினங்கள், கருப்பு மல்பெரி (M. nigra L.) மற்றும்  சிவப்பு மல்பெரி,  (M. rubra L.). 

வெள்ளை மல்பெரி மத்திய சைனாவையும், கருப்பு மல்பெரி மேற்கு ஆசியாவையும், சிவப்பு மல்பெரி, கிழக்கு அமெரிக்காவையும் தாயகமாகக்கொண்டவை. இம்மரங்கள் அவற்றின் கனிகளின் நிறத்தைக்கொண்டே பெயரிடப்பட்டிருக்கின்றன. வெள்ளை மல்பெரி 80 அடி வரையும், சிவப்பு 70 அடிவரையும், கருப்பு குட்டையாக அதிகபட்சம் 30 அடி வரையிலும் வளரக்கூடியது.

 75 லிருந்து 100 வருடங்கள் வரை உயிர் வாழ்ந்து பலன் தரும் இம்மரங்களில் ஆண் பெண் மரங்கள் தனித்தனியாகவும் சில மரங்களில் இருபால் பூக்கள் ஒரே மரத்திலும் காணப்படும்.

இதுவிரைவாகவளரும் தன்மையுடைய இலைகளை உதிர்க்கும் ஆண்டு முழுவதும் பூத்துக்காய்க்கும் தாவரமாகும்.  ஆழமான வேர்த்தொகுப்புடனும், மாற்றடுக்கில் அமைந்த காம்புகளுள்ள, விளிம்புகளில் மடிப்புகள் உள்ள இலைகளையும் கொண்டிருக்கும். மல்பெரி இலைகள், அதிக மடிப்புகளுடனும், ஒரே ஒரு சிறிய மடிப்புடனும் அல்லது மடிப்புகளே இன்றியும் மூன்று வடிவங்களில் இருக்கும். ஒரே மரத்தில், ஒரே தண்டிலும் கூட இவ்வாறு மாறுபட்ட வடிவங்களில் இலைகள் இருக்கும்.

 ஆண் மற்றும் பெண்பூக்கள் நீண்ட தொங்கிக்கொண்டிருக்கும் மலர்க்கொத்துக்களில் (Catkins) தோன்றும், காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று வெள்ளை, அடர்ஊதா அல்லது கருமைநிறத்தில் சிறியகூட்டுக்கனிகள் உருவாகும்.  இனிப்பும் புளிப்பும் கலந்து சாறு நிறைந்திருக்கும். சுவையான கனிகளிலிருந்து உணவில் பயன்படுத்தப்படும் நிறங்கள் தயாரிக்கப்படுகின்றது.

இத்தாவரத்தின் இளம்புழு வளர்ப்பிற்கேற்ற வகையில் புரதம், நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து மிக்கதான இலைகள் பட்டுப்புழுவிற்கு மிகமுக்கியமான அடிப்படை உணவாகவும், ஆடு மற்றும் மாடுகளுக்கு சிறந்த தீவனமாகவும் பயன்படுகிறது.பட்டுப்புழுக்கள் மல்பெரியிலைகளை மட்டுமேஉணவாக எடுத்துக்கொள்வதால் பட்டுப்புழுவளர்ப்பில் இவை மிகமுக்கியப்பங்குவகிக்கின்றது. பட்டுப்புழுவளர்ப்பு செரிகல்சர் (sericulture) எனவும் மல்பெரி வளர்ப்பு மோரிகல்சர் (Moriculture) எனவும் அழைக்கப்படுகின்றது.

உலகநாடுகளில் பட்டு மற்றும் மல்பெரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் சைனாவைத் தொடர்ந்து, இந்தியா பிரேசில், ஜப்பான், கொலம்பியா,மலேசியா மற்றும் பொலிவியா ஆகிய    நாடுகள் உள்ளன

4.6 11 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
11 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க
Felishta Mathuvanthi
Felishta Mathuvanthi
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Best

Thayananthi Madhushshika
Thayananthi Madhushshika
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Interesting…..

User Avatar
MJ
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

It’s a useful post

Magethran Suruthikka
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good

Magethran Suruthikka
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

good

Magethran Suruthikka
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Super

SURESH SURESH SURESH
SURESH SURESH SURESH
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice…

Kingsley Fernando
Kingsley Fernando
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice….

SURESH SURESH SURESH
SURESH SURESH SURESH
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

beautiful

Navaneethan N
Navaneethan N
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

useful

SURESH SURESH SURESH
SURESH SURESH SURESH
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

best