மீண்டும் மீண்டும் நினைவுகள்

0
495
1030_LL_bones-800x450-32c606e0

என்னை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது
காலம் கடந்தாலும் கரையாத
கணித்துச்  சொல்லும் மனதை
மீண்டும் மீண்டும் புகைப்படமாக
மனதில்  திரையிடப்படுகின்றது
கணினி மூலையின்  சேமிப்பு
காணமுடியவில்லை தடமாருகிறன்
எத்தனை வருடங்கள் கடந்தாலும்
நிகழ்வுகளைக் கணித்துச் சொல்லுகின்ற
அந்த சேமிப்பு நினைவுகள் எங்கே!
அழிக்க முயன்றேன் முடியவில்லை!
கலங்குகிறேன் நினைத்து
இளமையில்  நடந்த குறும்பு
எண்ணி மகிழ்கிறேன்!
வளமையில்  நிகழ்ந்த நிகழ்ச்சியில்
தடுமாற்றம்  வருந்தப்படுகிறேன்!
ஓராயிரம் தவறுகள் துள்ளி
விளையாடப் பருவங்களில்
பாவங்கள் செய்த நினைவுகள்!
வாழ்க்கையில் பதற்றம் நிகழ்கிறது
காலத்தால் உறவினர்களும் குழப்பங்கள்
பாசத்தால்.அடிமையானேன் அதனால்
ஆழத்தில் விழுந்த நிகழ்வுகளின் பிளவு
அழிக்கமுடியாத விருச்சிகள்
அழியாத பிரச்சினைகள். காலத்தால்
அழிந்து போன தோற்றங்களில்
அன்றாட வாழ்வின் நியாயங்களை
அலசலும் அலறும் துயரங்கள் ஆகியவை
அளவில் துன்பங்கள் மானிட வாழ்வில்
நினைவுகள் துவக்கும் முதல் இறுதி வரை
நினைவுகள் மீண்டும் மீண்டும் பிறந்தது கொண்டே இருக்கும் மனதில்

மானிட வாழ்வில் எச் செய்யாமலும்
இளமை முதல் முதுமை வரைக்கும்
மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும்
நியாபங்களை தொலைந்து போனால்
நினைவுகள் மலர்ந்து கொண்டேயிருக்கும்
நினைவுகள்  சோர்வடையச் செய்கின்றன
உறங்கச் செல்கிறேன் ஆனால் மீண்டும் நினைவுகள்   சுமை சுமக்கிறோம்
நினைவு அழிவதில்லை  ஆற்றல் உண்டு
கவனம் தேவை அது அபத்தமானது
நினைவுகள் அழிக்கக் கூடியது!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க