பனைமரம்

0
2804

பனை  புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு(borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன.

  • இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது.
  • பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.
  • மிக நீளமான உறுதியான சல்லி வேர் தொகுப்பை இது பெற்றிருப்பதால் மண் அரிப்பைத் தடுக்கும் இயற்கை அரணாக நம் முன்னோர் இதனை வயல் வரப்புகளிலும் குளம் கால்வாய்கள், ஆற்றுப்படுகைகளிலும் கடலை ஒட்டிய பகுதிகளிலும் வளர்த்தனர். இடத்தின் எல்லைகளைக் குறிக்கவும் வயல்களிலும் தோட்டங்களிலும் நட்டனர்.

சங்க காலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் பனை ஓலையில்தான் நடைபெற்றன. கடும் புயலைக்கூட தாங்கி நிற்ககூடிய வீடுகளை நம்முன்னோர் பனை ஓலையால்தான் முடைந்தனர்.

தித்திக்கும் சுவையுடைய ஜெல்லி போன்ற நொங்கின் சுளை வெயில் காலங்களில் ஒரு சிறந்த குளிர் பானமாகவும், தாதுப் பொருள்கள், விட்டமின்கள், நீர்சத்துக்களைக் கொண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.வெயில் காலங்களில் அற்புதம் பனை நொங்கு.

Panai Maram
  • மின்சார வரவுக்கு முன்னால் வெயில் காலங்களில் பனை விசிறிக்கு நமக்கு பெரிதும் உதவின. நிறைய விளையாட்டு பொருள்கள் செய்ய பனை பயன்படுகிறது. பனையில் நொங்கு வண்டிகள், காத்தாடிகள், பனை விதைப் பொம்மைகள் செய்து சிறுவர்கள் விளையாடினர். பனை ஓலையைத் தாங்கி நிற்கக் கூடிய மட்டை, வீடுகளைச் சுற்றி வேலி அமைக்கவும், தடுப்புத்தட்டிகள் பின்னுவதற்கும், கயிறு திரிக்கவும் பயன்படுகிறது.

புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)

அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)

பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

சிற்றினங்கள்:

போராசசு அத்தியோபம் – ஆப்பிரிக்கப் பனை மரம்.

போராசசு அத்தியோபம் – ஆப்பிரிக்கப் பனை மரம்.

போ. ஃப்ளாபெல்லிபர் – ஆசியப் பனை.

போ. ஃப்ளாபெல்லிபர் – ஆசியப் பனை.

போ. ஃப்ளாபெல்லிபர் – ஆசியப் பனை.

போ. சாம்பிரானென்சிசு – சாம்பிரானோ பனை.

முந்தைய கட்டுரைசந்தன மரம்
அடுத்த கட்டுரைமூங்கில்
Avatar photo
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க