தேடலில் அவள்

0
590
அவளுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு தான்
அத்தனை நாளாய் கொதித்துப் போன அவள் ஆசை 
ஓர் அடைவை நோக்கியே
பயணிக்கின்றது…
 
காத்திருப்பது அவளுக்கு புதிதல்ல ஆனால் 
அவளது தேடல் புதிதானது …
 
கண்ணிரண்டும் ஒளியாய் 
சுற்றி எங்கும் இருளாய்…
அவள் மட்டும் ஒரு புள்ளிக்குள்
அடங்கியிருக்கிறாள்…
 
 
ஏனோ கணத்துப் போகிறது 
அவள் இளகிய மனம்…
ஒரு போர்வைக்குள் புகுந்தவளாய்
வெளியே  மட்டும் அவள் முகம்…
 
அந்த வானத்தில் நிலவு மட்டும் 
அவள் அழுகையை ரசித்துக் கொண்டிருக்கிறது….
 
பாவம் அந்தப் பாவை
யாருமறியா அவள் ஆசையை
ஒரு சிசுவைப் போல 
மனதுக்குள் காத்து வருகிறாள்…
 
அந்த ஆசை நிறைவேறும்
என்ற அவாவில்
இலவை காக்கும் கிளியாக
காத்துக்கொண்டு இருக்கிறாள்…
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க