சிவப்பு பாண்டா

0
1766

சிவப்பு பாண்டா பூனையை விட சற்று பெரிதான, பெரும்பாலும் மரக்கறியே உண்ணும் ஒரு பாலூட்டி விலங்கு ஆகும்.

  • கரடிப் பூனை அல்லது ஃபயர்ஃபாக்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் மூங்கிலையே உணவாகக் கொள்கின்றன. அடர்த்தியான முடிகளுடன் காணப்படும் இவை இமயமலையையும் தென் சீனாவையும் பிறப்பிடமாகக் கொண்டவை. இது சிக்கிமின் மாநில விலங்காகும்.

ஆனால் நம் இந்தியாவிலேயே அழகான பாண்டா இருப்பது பலருக்கு தெரியாது. இவர் இமய மலையில் 8000 அடி மேல் இருக்கும் காடுகளில் வசிப்பவர். இவருக்கும் மூங்கில் இலைகள் என்றால் அதிகம் பிடிக்கும். கண்ணில் படுவது அபூர்வம். சிக்கிம், பூடான், அசாம், திபெத் போன்ற இடங்களில் இமய மலையில் ஒரு ட்ரேக் போனால் கண்ணில் படுவார். கரடிகள் போல இருந்தாலும் சிவப்பு பாண்டாக்கள், கரடி குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல!

  • பிறந்த பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும், சுமார் 800கிராம் எடையளவு கொண்டிருக்கும், கண் தெரியாது.
  • பத்து நாட்களுக்கு பிறகு அதன் நிறம் மாறத் தொடங்கி, அதன் வழக்கமான நிறமான கருப்பு-வெள்ளையை அடையத்தொடங்கும்.
  • நாற்பது நாட்களுக்கு பின்பு கண் தெரியத் தொடங்கும்.
  • ஆறு மாதங்களுக்குப் பிறகு மரம் ஏறத் தொடங்கும்.
  • ஒரு வருடத்தில் 45கிலோகிராம் அளவு எடை கொண்டிருக்கும்.
Red Panda

ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் எடை 100கிலோவை அடைந்திருக்கும், இனப்பெருக்கம் செய்யுமளவுக்கு தகுதி பெற்றிருக்கும். தோராயமாக 30 வருடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உயிர் வாழ்கிறது, வனங்களில் 14 முதல் 20 வருடங்கள் வரையே உயிர் வாழ்கிறது.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க