சந்தனம் (Sandal-wood)

0
1802

மூலிகையின் பெயர்: சந்தனம்

மருத்துவப்  பயன்கள்: சந்தனக் கட்டையைத் தொடர்ந்து உபயோகித்து வர வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும் மனமகிழ்ச்சியும், உடலழகும் அதிகமாகும். சந்தன எண்ணெயால் உடல் சூடு, வெள்ளைப்படுதல் ஆகியன கட்டுப்படும்.

பயன்படுத்தும் முறைகள்:

  • சந்தனக் கட்டையை, எலுமிச்சம் பழச்சாறில் உரைத்துப் பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச படர் தாமரை, வெண்குஷ்டம், முகப் பரு குணமாகும்.
  • 2 தேக்கரண்டி சந்தனத் தூளை, ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க இரத்த மூலம் குணமாகும்.
  • சந்தனத் தூள் ½ தேக்கரண்டி, ½ டம்ளரில் நீரில் போட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 3 வேளைகளாக 50 மி.லி அளவாக குடிக்கக் காய்ச்சல் குணமாகும்.
  • உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் என எல்லாவற்றிலும் சந்தனத்தின் தேவை இன்றியமையாதது.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் உட்கொள்ள பால்வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் இவையாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.

 
Sandal wood

குறிப்பு

வெட்டை சூடு குணமாக சந்தனத்தைப் பசும்பாலில் உரைத்து சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் 10 நாட்களுக்கு சாப்பிட்டு வரவேண்டும்.

ஒரு தேக்கரண்டி சந்தனத் தூளை ½ லிட்டர் நீரில் இட்டு காய்ச்சி குடிநீர் செய்து குடிக்க, சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க