கொரோனா

0
559

 

 

 

 

 

 

வுஹானில் உருவெடுத்த நீ
உலகயே ஆள போகிறாய் என்று
அறியாத பல அரசுகளையும் அதன் மக்களையும் சங்கடத்தில் போட்டாயா…

வருமை வந்தாலும்
வாடாத வல்லரசு நாடுகளையும்
வதையாய் வதைத்து
உதவிக்கி கையேந்த விட்டாயா…

யுகங்களாய் உலகை ஆள பல நாடுகள் எடுத்த முயற்சிகள் வீணாக
நான்கே மாதத்தில் எட்திசையும் ஆளத்தான் வந்தாயா…

பல லட்ச உயிர்களை குடித்தது போதாதென்று
பாகுபாடு இன்றி இரவு ,பகலாய் பாடுபட்டு
பல லட்ச உயிர்களை உன்னிடம் இருந்து மீட்டிய
மருத்துவர்களையும் பதம் பார்தாயா…

பரபரப்பான இயந்திர வாழ்கையினால்
பரவசமற்ற மனிதனையும்
பந்தங்களுடன் இணைத்து
பரவச படுத்தத்தான் வந்தாயா…

குற்றங்களற்ற உலகை மீட்டி
நீதிமன்றங்களை பூட்டி
சட்ட கோப்புகளுக்கு ஓய்வும் அழிக்க
ஊரடங்கு சட்டதையும் போட்டாயா…

ஏழையின் பசியை உணர்ந்து
உணவின் அருமை புரிந்து
வீண்விரையம் அற்ற வாழ்க்கையை
வாழ்வதற்கு கற்றுத்தான் தருகிறாயா…

ஏழை, பணக்காரன் பாகுபாடு இல்லை
அரசன், ஆண்டி வேறுபாடு இல்லை
மனிதம் என்ற ஒன்றுக்குள் எல்லோரும்
சமத்துவம் என்பதை புரிய வைக்கிறாயா…

மனிதனாலே இயற்கை அசுத்தமானதை உணர்த்தி,
தூய்மையான வளியினை பாரினில் பரப்பி,
பூக்களின் நறுமணமும்
பறவைகளின் இன்னிசையும் நிறைந்த
பசுமையான இயற்கையை ரசிக்க வைத்தாயா…

மனிதன் விட்ட தவறுகளை உணர்ந்து விட்டான் -கொரோனாவே…
நீ வந்த காரணத்தையும் புரிந்து
விட்டான் -கொரோனாவே…
உன் கோபத்தை குறைத்துவிடு
நீ உயிர் காவும் பட்டியலை நிறுத்திவிடு..
உன் தோன்றல் எவ்வாறு மர்மமோ
அவ்வாரே மாயமாய் உலகைவிட்டு சென்றுவிடு…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க