கர்ப்ப காலத்தின் போது பெண்களின் உணவு முறை!

0
919
கர்ப்ப காலத்தின் போது பெண் தன் குழந்தைக்கும் சேர்த்து உணவு உண்கிறாள். அதனால் எந்த உணவு வழக்கமான நாட்களைவிட கர்ப்ப காலங்களில் பெண்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். உதாரணமாக பாலில் கால்சியம் அதிகம் இருக்கிறது. ஆனாலும் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை அருந்துவது உகந்தது.
பயறு வகை உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு குமட்டல் அதிகம் இருக்கும் என்பதால் வாழைப்பழம் சாப்பிடுவது அதற்கு தீர்வை தரும்.
கர்ப்பிணிகள் டீ, காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். டீ மற்றும் காபியில் காபின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் காபி பருகக்கூடாது. வேண்டுமானால் குறைந்த அளவிற்கு டீ குடிக்கலாம். ஆனால் அதுவும் அதிகம் பருகுவது ஆபத்தானதாகும்.
காபின் அளவு அதிகம் இருப்பதால், கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
 
இரும்பு சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். உதாரணமாக கீரை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதே போல் கொழுப்பு குறைவான இறைச்சிகளையும் உண்ணலாம்.
கர்ப்பிணி பெண்கள் உடலில் நீரின் அளவு சீராக இருக்க வேண்டும். அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போல் ஆரஞ்சு பழங்கள் சாப்பிடுவது நார்ச்சத்தை உடலுக்கு தருகிறது.
திகமாக திரவ உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உடலையும், சருமத்தையும் வறட்சியில் இருந்து மீட்டு ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும்.
கர்ப்பிணி பெண்கள் முட்டை சாப்பிடுவது அவர்களின் உடலுக்கு நல்லது. முட்டையில் புரதச்சத்து அதிகம் உள்ளது, மேலும் உடலுக்கு தேவையான அமினோ அமிலத்தையும் தருகிறது.
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க