உவமை நலம்

0
699
Screenshot_2021-11-19-20-54-49-655_com.whatsapp-11f03fa9

காலம் தெரியாமல் நீண்டு புகழ்க் கொண்டு வையகத்தில் தனுரிமையாக்கி பல துறைகளில் வான் சிறப்பு கொண்டு வையகமொங்கும் ஒளிசுடராய் உயர்ந்து நிற்கிறது  செம்மொழித் தமிழ். உவமை அதன் சிறப்பாகும்.

தமிழிலக்கியம் அகழ்ந்து அய்ந்து பார்க்கும் பொழுது  தமிழில் சில உவமைகள் உள்ளமனதில் தொடும் அளவுக்கு சங்கபுலவர்கள் இலக்கிய புலமையை கண்டு வியப்புக்குளாக்கின்றது.

உவமை  பகுதிகளாகக் காட்டுகிறது. ஒவ்வொரு பகுதியும் 9 இயல்களைக் கொண்டது. தமிழரின் கருத்துக்கள் நூலில் அமையுமாற்றைக் கூறுவது மூன்றாவது பகுதியாகிய பொருளதிகாரம். இந்த அதிகாரத்தில் ஏழாவது இயல் உவமவியல்.அறியாத ஒன்றை அறிந்து ஒன்றைக் காட்டி றன் இதுபோன்றது என உணரவைப்பது உவமம். உவமம் இக்காலத்தில் உவமை எனப்படுகிறது. பொதுவாகவே பிறரை உவமை நலத்துடன் அழைக்கப் பெறுவது நாம் காணுகின்றோம். உதாரணமாக என் தந்தை பெயர். அரங்கசாமி ஆனால் அவருடையது ஊர் பெயரும். தந்தை பெயரும் சேர்ந்து. இராகு அரங்கசாமி
அவரை இராகு என்று அழைப்பார்கள் இவ்வாறு உவமைகள் கொண்டு அழைப்பார்
குறுந்தொகையில் உவமை நல

சங்கஇலக்கிய நூலாகிய குறுந்தொகை அத்தொகையை  எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடி முதல் எட்டடி வரையிலான பாடல் வரிகளைக் கொண்டது. இந்நூலின் சிறப்புக் கருதி இதனை நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு சிறப்பித்துள்ளனர். குறுந்தொகைப் பாடல்களைப் பலரும் பெருமளவு மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளமை இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும்.
அந்நூலில் செம்புலப்பெயரனீரார் என்ற புலவர் தலைவனுக்கும் தலைவிக்கும் அன்புண்ர்வுவை, காதலுணர்வை, இரண்டு உள்ளங்களும் ஒன்றி- ஊடுருவி ஒருவேளை கொண்டு வருணிக்கிறார்.

பருவ எழில் உள்ளம் வெண்மையினும் தூய்மையானது  எனவே உள்ளம்  கள்ளம் கபடம்  காப்புண்ர்ச்சி  போன்ற இழி  நெறியிலிருந்து  விடுபட்டு நிற்கின்றது. தன் தரத்திற்குத் தலைவனைத் தேர்வு செய்கின்றாள். அருவி கொட்டுவது போல் பள்ளத்தில் பாய்கின்றது போல் உள்ளம் படவிடுகின்ற தலைவன் மீது. தலைவன் அன்பு செலுத்துகிறான். விழிகளில் தென்படும்மொழியும் புரிந்து கொள்ளுகிறாள். இருவருக்கும் இயற்கை பலபுணர்ச்சி திகழ்கின்றது.

ஒவ்வொரு தலைவி (காதலர்கள் ) அச்சம்.தலைவனை பிரிவினை தன் துக்கங்களை அவள் வெளிப்  படுத்தியதில்லை அவளுடைய நாணம் தடுக்கின்றது.வெட்கம் படுகிறாள்.
ஆனால் பண்பின் உறைவிடம் அதை உணருகிறேன். நான் உன்னை விட்டுப் பிரிவில் லை ஆழ்ந்த காதலைத் தெரிவிக்கிறான்.
என் தாயும் நின் தாயும்_தந்தையும்_நின்தந்தையும்,யானும்_நீயும் என்தகு முறையில்லை எனினும் செம்மண் நிலத்துடன் பெய்த மழை நீர் அமண்ணேடு கலந்து அதன் தன்மையும் _நிறமும் அடைதல் போல்,அன்புடைய இருவரும் ஒன்றுபட்டன யென் கூரும் உண்மைகள் புலவர் எவ்வாறு ஆராய்ந்து பாடுகின்றார்.

அகப்பொருளாவது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் அனுபவிக்கும் இன்பம் இத்தகையது என்று பிறரிடம் கூற இயலாததாய் அமைவது. குறுந்தொகையில் இடம் பெற்றுள்ள பின்வரும் பாடல் பண்டைத் தமிழர் நாகரீகத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறந்த பாடலாகத் திகழ்கிறது.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”

செந்நிலத்திலே பெய்யக்கூடிய மழைநீரானது நிலத்தின் சுவையை, நிறத்தை இயற்கையைப் பெற்றதுபோல், தலைவனும் தலைவியும் மனத்தால் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டனர் என்று விளக்குகிறார்.தலைவன் பிந்து செல்லுகிறான் நெடுநாளாகியும் திரும்பவில்லை வழி மேல் விழி வைத்து காத்துயிருக்கிறால்.

தலைவி நான் செய்தபற்றினை காலத்தில் அழியாதது.இணைந்தும்_குழைந்தும் இன்பம்கண்ட போதித்து ஏனைய தலைவர்கள் போல் ” பிரியேன் பிரித்தால் உயிர்தியேன்” என் கூறுகிறாள்.
அகநானூற்றில் காதலர்களைப் பிரிக்க இயலாது  யென மா முலானார் தலைவன் தலைவின் உருகிமொழி உவமையோடு விளிக்கின்றார்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க