உலர் திராட்சையின் மருத்துவ குணம்!

0
1483
 
பழங்கள் எந்த அளவிற்கு உடலுக்கு நன்மை தரக்கூடியதோ, அதே போல உலர் பழங்களிலும் சுவையும், சத்துக்களும் அதிகம் உள்ளன. உதாரணமாக நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக் கொள்ளும் உலர் திராட்சையானது பல்வேறு மருத்து குணங்களை கொண்டது. திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சை பழத்தில், திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. இவை எம்மாதிரியான நலன்களை உடலுக்கு தருகின்றன என்று இப்போது பார்க்கலாம்!
ஒரு நாளைக்கு பத்து உலர் திராட்சை என்று மூன்று மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தோமானால், உடலில் ஆரோக்கியம் ஏற்படுவதை கண்கூடாக காண முடியும்.
உலர் திராட்சையானது தாமிர சத்துக்களை கொண்டுள்ளதால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இதனால் ரத்த சோகை போன்ற நோய்கள் குணமாகும்.
குழந்தைகளுக்கு தினமும் இரவு தூங்கச்செல்வதற்கு முன் பாலுடன் உலர்திராட்சையை சேர்த்து காய்ச்சி கொடுத்தால் தேகம் வலுப்பெறும்.
கர்ப்பிணி பெண்கள் பாலுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தார்களேயானால் பிறக்கும் குழந்தை மேலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உலர் திராட்சையில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு தொடர்ந்து கொடுத்தோமானால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுப்பெறும்.
 
உடல் வலிக்கும் உலர் திராட்சை மருந்தாக பயன்படுகிறது. சுக்கு, பெருஞ்சீரகம் மற்றும் உலர் திராட்சையை தண்ணீர் சேர்த்து காய்ச்சி குடித்தால் உடல் வலி தீரும்.
பாலுடன் மிளகு, உலர் திராட்சையை சேர்த்து காய்ச்சி பருகினால் தொண்டை கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு உடனடி பலன் கிடைக்கும்.
உலர் திராட்சை பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்துவிட்டு காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் தீரும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், புகை பிடிக்கத்தோன்றும் போது மாற்றாக உலர் திராட்சை பழங்களை சாப்பிட்டால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன
 
முந்தைய கட்டுரைஅரச மரம் (Ficus religiosa)
அடுத்த கட்டுரைவேப்பமரம் (Neem Tree)
Avatar photo
தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க