இறகுதிர் காலம்

0
629

 

 

 

 

 

 

 

உன்னோடு பறப்பதற்கு
வானம் படைத்தேன்
அந்த
நிர்மல வானில்
இரவுகளில் மட்டுமே
இறக்கைகள் விரியுமென்று
கொன்று கொண்டிருந்தாய்
என் இன்பங்களை

நீ இறகு விரித்த
இரவில்
கரைந்த சாயத்தை
கண்டு கொள்ளாமல்
படர்ந்து கொண்டிருந்தேன்
பொய்மையின் வண்ணத்தில்

பொய்யும் அழகென்றேன்
உன்னுள் உறைந்ததால்
இறந்து கொண்டிருந்த
என் உயிரின்
கடைசி த்துளி
சிந்திவிடுவதற்குள்
நீ பறக்க தொடங்கி விட்டாய்
யாரோ படைத்த
புதிய வானத்தில்;
எனக்கு தெரியும்

எந்த வானமும்
அழகாயிரது
விசாலமாயிராது
சௌகர்யமாயிராது
எனதைப்போல

உன் இறகுகள் உதிரும்
சாயம் வெளுக்கும்
என் வானமோ மாறாது

இறகுகள் உதிர்ந்து
திரும்பும் உனக்காக
உயிர்க்க தொடங்குகிறேன்
புதியதொரு வானத்தை
பிரசவித்த படியே!!!!

 

 

 

 

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க