ஆப்பிள் மேக்புக் ப்ரோ 2019 அறிமுகம்

0
1405

முன்னனி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் 2019 மேக்புக் ப்ரோ இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வர்த்தகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்வது ஆப்பிள். இந்நிறுவனத்தின் 2019 மேக்புக் ப்ரோ 13 இன்ச் மற்றும் 15 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் 8 th & 9th Generation Intel Core Processor கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால், முந்தைய தலைமுறை மாடலை விட, இரு மடங்கு வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.

டச் பாருடன் வழங்கப்பட்டுள்ள 13 இன்ச் ஆப்பிள் ப்ரோ மேக்புக்  2.4GHz quad-core processors கொண்டுள்ளது இரண்டு மடங்கு மிகவும் வேகமாக இயங்கும்.

15 இன்ச் ஆப்பிள் ப்ரோ மேக்புக்  ninth-generation six-core or eight-core Intel processor கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் keyboard updateஐ வழங்கியுள்ளது.

40% அதிக செயல்திறனை அளிக்கும் மற்றும் ஃபோட்டோஷாப் போன்ற பயன்பாடுகளை 75% வேகமாக இயங்கும்.

15 இன்ச் மேக்புக் ப்ரோ (2019)

– 6-கோர் இன்டெல் கோர் i7 மற்றும் i9 பிராசஸர்கள்

– அதிகபட்சம் 2.6GHZ to 4.5GHZ வரை டர்போ பூஸ்ட்

13 இன்ச் மேக்புக் ப்ரோ (2019)

– குவாட்கோர் இன்டெல் கோர் i5 மற்றும் i7 பிராசஸர்கள்

– அதிகபட்சம் 2.4 GHZமற்றும் 4.7GHZ வரை டர்போ பூஸ்ட்

டச் பாருடன் வழங்கப்பட்டுள்ள13 இன்ச் ஆப்பிள் ப்ரோ மேக்புக் , 1,799 டாலர் (இலங்கை மதிப்பில் ரூ.3,17,865) விலை என்றும், 15 இன்ச் மாடலின் விலை 2,399 டாலர் (இலங்கை மதிப்பில் ரூ. 4,23,879) விலை என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணினிகளில் முதல் முறையாக 8 core processor கொண்டுள்ளது.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க