அரச மரம் (Ficus religiosa)

0
3337
  • பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.
  • ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது.
  • இது இந்தியா, இலங்கை, தென்மேற்குச் சீனா, இந்தோசீனா மற்றும் கிழக்கு வியட்நாம் போன்ற பகுதிகளைச் சார்ந்தது..

அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இத் தாவரத்தின் அடி மரத்தின் விட்டம் 3 மீட்டர் வரை வளரக்கூடியது.

அரச மரம் மிகவும் உயரமாக படர்ந்து வளரும்.பூக்காமலே காய்க்கும் வகையைச் சேர்ந்தது.இதன் பழங்கள் விதை நிறைந்தவை.

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம்.

Ficus religiosa

பயன்கள்: 

  • அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.
  • பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும். அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் பழுப்பு இலைகளை எரித்துத் தூளாக்கி, தேங்காய் எண்ணெயில் கலந்து தடவிவலி, தீப்புண், அதனால் ஏற்பட்ட தழும்புகள் குணமாகும்.

அரச இலைச் கொழுந்தைப் பசும் பாலில் இட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்துக் குடிக்க சுரம் குணமாகும்.

அரச இலை, மாவிலை, நாவல் இலை, அத்தி இலை  இவற்றைச் சம பங்கு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர பெண்களுக்க மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அரசமரத்தின் இலைக் கொழுந்தை அரைத்து மோருடன் கரந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு குணமாகும்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க