loader image
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

நான் ஒர் ஏழைச் சிறுமி…

0
வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்.... அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு.... பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு... கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு.... பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு... மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை... சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு... பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...

விதியின் விலகல்

ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே ஓரக்கண் பார்வையாலே ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!! மதியிழந்த மானிடர்கள் விதியென்று கடந்து போவர் சிட்டுகளின் முனுமுனுப்பை யார்தான் இங்கு கேட்டறிவர் தெருவோர விளக்குகளால் வீதிகளும் வெளிச்சமாகும் விதிசெய்யும் விளையாட்டில் இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும் வீட்டிலுள்ளோர் உண்டு மகிழ விடியுமுன்னே செல்வோருண்டு கூட்டிலுள்ள பட்சிகளும் இறைதேடி போவதுமுண்டு ஏராள துயர் வந்தும் ஏனென்று கேட்க...

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும்...

என் கனவு

கண்ட கனவுகலங்கியதென்றுதூக்கம் துடித்துகண் விழித்தெழுந்தேன்!கனவுகள் கண் சுற்றகவி  கொண்ட என் மனமும்கண் விழித்து எழுந்தது!ஓரமாய் நின்றேன்நிலவு பாடும் சத்தம் கேட்கசந்திரன் போதுமாகிவிடும் நேரம் பார்க்கஅழகின் அமைதியைதுணிவாய் கண்டேன்.....கனவை கண்டேன் -அதைஎன் நினைவில்  கொண்டேன்...!!!

நாங்கள் அறிந்த அவர்கள்….

0
அவர்கள் ஒருபோதும் காலியான தட்டுகளை பார்ப்பதில்லை வெறுமையான குவளைகளை நிரப்ப முயற்சிப்பதில்லைபாத்திரங்கள் நிறைந்திருக்கும் சமயத்தில் படையல் செய்கிறார்கள்இல்லை எப்போதேனும்விருந்துக்குத் தயாராகும் நேரங்களில் அழைப்பு விடுக்கிறார்கள்அவர்கள் எந்த வகையில் சேர்த்தி எனத் தெரியவில்லைஎப்போதேனும் உபயம் தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மறைந்து விடுகிறார்கள்பிறிதொரு நாளில்நினைவு கூர்ந்து தேவைகள் தீர்ந்த பின் வாசல் கதவுகளை தட்டுகிறார்கள்கைகொடுக்க மறந்தவர்கள்கைமாறு...

ஆச்சர்யம்தான் !

மழை எங்கள்  உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...

எழுந்திடு

விழுகையில் அழுதவனாக இராமல் எழுந்தவனாக உன் சரித்திரம் மாற்ற எழுந்திடு ! உன்னை உன் நிலை தாழ்த்தி உன் ஊக்கம் குறைப்பவர் முன்னே ஓங்கி வளர்ந்திட எழுந்திடு ! எம்முள் தீயை வளர்த்து அத்தழல்தனில் குளிர்காயும்...

சின்னஞ்சிறு சிட்டு

சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!! தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!! உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...

புறப்படு

உன் பயணம் எது என நினைத்தாய்?உன் நிலையில் தரித்து உண்மை மறுத்துஉன்னை வளர்த்து காலத்தின் வேகத்தில் அச்சாணி இல்லாத சக்கரமாய் சுழன்று ஓர் நாள் தடம்புரண்டு ஓய்வான கல்லறையில் உறங்குவது என்றோ ?உன்...

உனக்கென்ன கவலை தம்பி?

எரிபொருளாய்ப் பாவிக்கஎண்ணெயுண்டுஎழுதுவதற் குபயோகமாகும் பென்சிற்கரிசெய்யும் கனிப்பொருள்கள் கட்டித்தங்கம்கார்டயர்கள் செய்தற்குரப்பர்பாலும்அரியவிலைமதிப்புள்ள இரத்தினங்கள்அள்ளியள்ளித்தரும் சுரங்கம் அடியிலுண்டுஉரிய பல வளமெல்லாம் உள்ளபோதுஉனக்கென்ன கவலை இங்கு உளது தம்பி? தேயிலையும் பயன் நல்கும் தென்னந்தோட்டம்தேடரிய மூலிகைகள் தேக்கு பாலைகாயவிடக்காயவிட உறுதி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!