வாழ நினைத்தால் …

0
854

 

 

 

 

மண்ணிலே பிறந்த மானிடனே
விண்ணையும் நோக்கடா ஒரு தடவை
கதிரவன் கதிரொளி பட்டு
தாரகை தன்னொளி விட்டாலும்
காரிருள் ராத்திரி சூழ்ந்திடவே
தாரகை தண்ணொளி வீசிட
கதிரவன் கரங்களும் அடங்கிடுமே …
காலமும் நேரமும் மாறலாம்- உன்
காலடி ஏறுநடை போடலாம் !

ஊனமாய் உன் பிறப்பை
அவ் ஆண்டவன் விதித்தாலும்
சேற்றிலிட்ட வித்தாய்
எழுந்திடு நீ விருட்சமாய் !
சோகமெனும் இருள் சூழ
சோதனையின் வலி கூட
வேதனையின் புள்ளியில்
கிறுக்கிடு உன் வரிகளை
சாதனையின் புன்னகையில்
மறந்திடு உன் வலிகளை ….

மனிதனோ சில வகை – அவன்
மனங்களோ பல வகை !
அன்பென குணமென பழகிட
அவன் பணமென பொருளென
உனை எதிர் பார்த்திட
உன்னன்பும் அங்கு இறந்திட
வீழ்ந்து துவழாதே மானிடனே…
அனுபவம் தந்த கற்களால்
எழுப்பிடு உன் படிகளை…

கவலையும் கஷ்டமும்
கடவுளின் வரமடா – அதை
கொடுப்பதே அவர்
வணக்கத்தின் பலனடா – அதை
மாற்றினால் நீயே
அவரது சிசுவடா – நீ
வாழ நினைத்தால் வாழலாம்… !

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க