வானவில் மரம்

0
777

 

 

 

 

 

 

பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவை தாயகமாகக்கொண்ட  பலநிறங்களிலான மரப்பட்டையைக்கொண்ட  யூகாலிப்டஸ் மரம் ‘’ வானவில் மரம்’’ எனப்படுகின்றது.

Eucalyptus deglupta  என்னும் தாவர அறிவியல் பெயருடைய மிர்டேசியே குடும்பத்தை சேர்ந்த இம்மரத்தின் பட்டைகள் நீலம், ஊதா, ஆரஞ்சு, அடர் சிவப்பு என பல நிறங்கள் கலந்ததாக இருக்கும்.

 2 மீட்டர் விட்டமும் 80 மீட்டர் உயரமும் இருக்கும் இதன் மரப்பட்டைகள் மற்ற யூகலிப்டஸ் மரஙகளைப்போலவே  ஆண்டுக்கு ஒருமுறை ` உரிந்து புதிய இளம்பச்சை மரப்பட்டை தோன்றும்.  பின்னர் இந்த பச்சை நிறம் மெதுவாக பல நிறங்களுக்கு மாறி விடும்

இம்மரத்தை இதன் அழகிய  பலவண்ணப்பட்டைக்காகவே ஹவாய், கலிஃபோர்னியா மற்றும் டெக்ஸாஸில் அலங்காரத்துக்காக வளர்க்கிறார்கள். காகிதக்கூழ் தயாரிப்பிலும் இம்மரம் உபயோகப்படுகின்றது

700க்கு மேற்பட்ட யூகேலிப்டஸ் மரங்கள் இருகும் ஆஸ்திரேலியாவில் இந்த வானவில் மரம் உள்ளிட்ட இனும் 3 யூகேலிப்டஸ் இனங்கள் இல்லை.(non Australian eucalyptuses)

இம்மரங்கள் வேகமாக   வளரும் இயல்புடையவை. இவற்றில் பலகைவேர்கள் எனப்படும் root buttresses  காணப்படும்.1850 ல் பெயரிடபட்ட இம்மரத்தின் சிற்றினமான deglupta  என்பதற்கு லத்தீன மொழியில் பட்டைகளை உரித்தல் என்றுபொருள்.1914ல் மற்றொரு தாவரவியலாளரால்  E. binacag  எனப்பெயரிடபட்டிருப்பினும் இவ்விரண்டுமே ஒரே மரத்தைக் குறிக்கும் பெயர்கள் தாம் (synonyms). மரத்தின் மேற்புறத்தில் மட்டுமே இப்படி வானவில் நிறங்கள் காணப்படும் உட்பகுதியில் பிற யூகலிப்டஸ் மரங்களைப் போலவேதான் இருக்கும்  அழகிய சிறு வெண்மலர் கொத்துக்களுடனிருக்கும் இம்மரம் 1929ல்  அறிமுகப்படுத்தப்பட்ட  ஹவாயில்  அதிக அளவில் காணப்படுகின்றன.

 

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க