வரையாடு (Mountain Goats)

0
1842

வரையாடு = வரை+ஆடு

வரை என்பது குவடு, குன்று, மலை, மலையுச்சி ஆகியவற்றைக்குறிக்கும். ஆடு என்பது விலங்கினமான ஆட்டைக்குறிக்கும். வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்காகும்.

மரையா என்று சங்கப்பாடல்களில் சொல்லப்படும் விலங்கு வரையாடு என்று இன்று சொல்லப்படுகிறது. நீலகிரி டார் என்று அதற்கு பெயர். உயரமான மலைகளில் செங்குத்தான பாறைகளில் ஏறிச்செல்லக்கூடிய அபூர்வமான இந்த விலங்கை ஊட்டியின் கல்லட்டி போன்ற பகுதிகளில் நின்றால் தூரத்து மலைகளில் காணமுடியும். பேன் ஊர்வதுபோல மலைவிளிம்பு பாறைகளில் வரிசையாகச் செல்லும்.

இந்த ஆடு ஏறாத பாறைகள் இருக்கமுடியாது. இதன் பாதுகாப்பு முறையே உச்சிப்பாறை ஏறுவதுதான். ஆகவே இன்றும் ஒரு மலையை அதி உச்சி என்று சொல்ல வரையாடு ஏறா மலை என்று சொல்வதுண்டு மாநில விலங்கான தார் எனப்படும் வரையாடுகளுக்கான சிறப்பு இனவிருத்தி மையத்தை உதகையில் அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டது.

  • வரையாடு மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இவை 4000 அடி உயரத்திற்கு மேலேயுள்ள மலைமுடிகளில் மட்டும் வாழும்பண்புடையன. மிகவும் அழிந்துவரும் இனங்களில் ஒன்றான இவ்விலங்கு தமிழ் நாடுமற்றும் கேரளா மாநிலங்களில் ஒரு சில குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டும்காணப்படுகிறது. வரையாடு தமிழ் நாட்டின் மாநில விலங்கு  என்பதும் தமிழ்நாட்டில்சில நூறு வரையாடுகளே எஞ்சியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.
  • வரையாட்டின் தற்பொழுது மொத்த உயிர்த்தொகை 2000 முதல் 2500 வரையில், மொத்தம் 17 இடங்களில் இருக்கலாம் எனக்கணக்கிடப்பட்டுள்ளது. இவை மிகவும் குறைந்த எண்ணிக்கையில்மற்றும் பல சிறு தனிமைப்படுத்தப்பட்டக் உயிர்த்தொகைகளாகவாழ்வது இவ்வினம் அழிவதற்கு மிகவும் ஏதுவாக இருக்கிறது.
  • இதன்மொத்த உயிர்த்தொகையில் சுமார் 1000 எண்ணிக்கையிலானவைகேரளாவின் இரவிகுளம் தேசிய பூங்காவிலும், சுமார் 300 எண்ணிக்கையிலானவை பகுதிகளிலும் மற்றும் ஏனையவைஇன்னபிற இடங்களிலும் காணப்படுகிறது . இவ்விலங்கின்வாழ்விடம், காடுகள் திருத்தப்பட்டு பணப்பயிர் சாகுபடிசெய்யப்படுவதால் மிகவும் பிளவுப்பட்டுள்ளது.
  • காடுகளில்கால்நடை மேய்த்தல், மின் உற்பத்திக்கென அணை கட்டுதல்,காடுகளில் சாலைகள் அமைத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்றமாந்தரின் பல்வேறு செயல்கள் வரையடுகளின் வாழ்க்கைக்குப்பெரும் அச்சுறுத்தல்களாகியிருக்கின்றன.
 

வரையாடு காணப்படும் இடங்கள்:

  •   இரவிக்குளம் தேசிய பூங்கா (கேரளா)
  •   ஆனைமலை (தமிழ் நாடு)
  •   தேனி – மேகமலை (தமிழ் நாடு)
  •   முக்கூர்த்தி மலைகள் (தமிழ் நாடு)
  •   நீலகிரி மலைகள் (தமிழ் நாடு) 
  • அகத்திய மலைகள் (கேரளா) 
  • ஹை கில்ஸ், மூணார் (கேரளா) 
  • வால்பாறை (தமிழ் நாடு) 
  • ஆழியார் மலைகள் (தமிழ் நாடு)
  • சிறீவல்லிப்புத்துர் (தமிழ் நாடு)
  • பிளவுபட்ட குறைந்தஉயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கமும்வரையாடிகளின் வாழ்விற்கு மற்றொரு அச்சுறுத்தலாகும்.

வரையாடு தோற்றம்

ஆண் மற்றும் பெண் வரையாடுகள் காட்டாடு இனத்திலேயே வரையாடு மிகவும் பெரிய உடலமைப்பைகொண்டது. இந்தியாவில் காணப்படும் மற்றொரு காட்டாடுஇனமான “இமாலய காட்டாட்டை” விட சற்று பெரியது ஆண்வரையாடு. பெண் வரையாட்டைக் காட்டிலும் உடல் எடையில்இரண்டு மடங்குடையது வளர்ந்து பருவமடைந்த வரையாட்டில்பாலியல் ஈருவத்தோற்றம் உண்டு. ஆண் வரையாட்டின் கொம்பு பெண்வரையாட்டின் கொம்பின் நீளத்தைவிட அதிகமாகும். உயர்ந்த அளவு ஆணில் 44.5 செ.மீ நீளம் உள்ள கொம்புகளும் பெண்ணில் 35.6 செ. மீ நீளம் உள்ள கொம்புகளும் காணப்பட்டுள்ளது.

வரையாடுகளின் இனப்பெருக்கம்

வரையாட்டின் இனப்பெருக்க காலம் ஜூன் முதல் ஆகஸ்ட்  வரையிலான தென்மேற்கு பருவமழை காலமாகும். இவ்விலங்கின்சூல்கொள்ளல் காலம் (பேறுகாலம்) 178 முதல் 190 நாட்களாகும். தாய்பேறுகாலத்திற்கு பிறகு ஒன்று அல்லது அரிதாகவே இரண்டு குட்டிஈன்றெடுக்கும். பெரும்பாலும் குட்டிகள் நவம்பர் முதல் பிப்ரவரி மாதங்களில் பிறக்கும். இக்காலம் குளிர் காலமென்பதால் குட்டிகளை அதிக வெப்பத்தின் தாக்கமின்றியிருக்கும். தாய், தன் குட்டியை தன் அரவணைப்பில் வைத்து மிகவும் பாதுகாக்கும். குட்டி பிறந்த பிறகு தாய்ப்பாலை பெரிதும் நம்பியிருந்தாலும், 2 முதல் 4 வாரங்களில்(கிழமைகளில்) திட உணவுகளைத் தின்னத் துவங்கும். இதன் சராசரி ஆயுட்காலம் காடுகளில் சுமார் 9 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

வரையாடுகளின் வசிப்பிடம்

கடல் மட்டத்திலிருந்து 1,200 – 2,600மீ உயர்ந்த மலைமுகடுகளில் உள்ள புல்வெளிகள் வரையாடுகளின் வாழிடமாகும். இவை 6 முதல் 150வரை உறுப்பினர்களை கொண்ட குழுக்களாக வாழும். பெரும்பாலும் 11-71 உறுப்பினர்களை கொண்ட குழுக்களே அறியப்பட்டுள்ளன. பருவமடைந்த ஆண்கள் பெரும்பாலும் தனித்து வாழும் அல்லது சிறுஆண் குழுக்களாக வாழும், இனப்பெருக்க காலத்தில் பெண்குழுக்களோடு சேரும். பெண் குழுக்கள் தங்களுக்கென்று ஒருஎல்லையை வகுத்து அதனுள் வாழும், ஆண்கள் பல பெண்குழுக்களோடு கலந்து வாழும். இவை ஒன்றுக்கொன்று தகவல்தொடர்புகளை பார்த்தல், கத்துதல், நுகர்தல் ஆகியவற்றின் மூலம்பரிமாறிக்கொள்கிறது.

வரையாடுகளின் உணவு

இவை புல்வெளிகளில் காணப்படும் புற்களையே உணவாக உண்ணும். வரையாடுகள் கூட்டமாக விடியற்காலையிலோ அல்லதுமாலை நேரங்களிலோ மேயும். அதிக வெப்பமான பகல் வேளைகளில்செங்குத்தாக இருக்கும் பாறை இடுக்குகளில் ஓய்வெடுக்கும். இத்தகைய இடங்கள் கொன்றுண்ணிகளிடமிருந்து பாதுகாப்பாகஇருக்கும் என்பதால் இவ்விடங்கள் தேர்வு செய்யப்படுகிறது. கூட்டமாக ஓய்வு எடுக்கும்பொழுது அக்குழுவின் ஒரு உறுப்பினர்(பெரும்பாலும் பெண்), உயர்ந்த இடத்திலிருந்து காவல் காக்கும். இவ்விலங்குகள் மிகவும் கூரிய பார்வையுடையவை மேலும்எதிரிகளை மிகவும் எட்டத்திலிருந்து (தொலைவிலிருந்து) கண்டுபிடிக்கக் கூடியவை. தீவாய்ப்பைக் (அபாயத்தைக்) குறிக்கச்சீழ்க்கை ஒலி எழுப்பியோ அல்லது உரக்கக் கத்தியோ உணர்த்தும். வரையாடுகள் சிறுத்தை, செந்நாய், புலி போன்ற விலங்குகளால் கொன்றுண்ணப்படுகின்றன.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க