சூழ்நிலை

0
1374
cropped-header-spiritual-leadership

உயர்ந்து நிற்கும் வானமதில்
ஓடும் மேகத்திலும் சோகம்
உண்மையான உறவுகளின் இதயத்திலும் சோகம்
வீசும் தென்றலிலும் சோகம்
விண்மீன் கூட்டத்திலும் சோகம்

மனிதன் அறிவின் மூடனாய் ஆனதும்
மனிதன் அறிவின் அறிவாய் ஆனதும்
இவ் யுகமே!
காரணம் யாது எனின்
மூடன் அறிவாளி என்று யுத்தத்தினை போன்று

உயிர்கொல்லி நுண்ணங்கியை நோக்கின்றான்
பாவம்!
அறியாதவன் பாவம் பார்க்குமோ உயிர்கொல்லி

அறிந்து தெளிந்து அறிவின்
உச்சத்தின் ஊற்றிலும்
அறிவின் விடைகானா
விஞ்ஞானத்தின் திறனிலும்  இங்கே-  விளைவது என்ன?
விஞ்ஞானத்தின் அபரித வளர்ச்சியும்
ஆய்வுகூட ஆராச்சியும் தான்  என்று
யார் அறிவார்?
பாமரர் அறியாதவர் என்று எண்ணி
உலகு பாதாள வழிக்கு செல்ல கூடுமோ?

கலப்படம் எதிலும் இல்லை என்றால்
விசித்திரம் தான்- ஆனால்
கலந்து உயிர்ப்பித்த கருவறை
உயில்கொல்லி-உருவாக்கிய
அன்னையை கொல்வது விசித்திரம்தான்

கொல்வது மானிடரை என்றாலும் தான் விதிவிலக்கு என்று
சில அரசியல்வாதி என்றுகிறான் போலும்
மானிடரை காப்பதே அரசின் இறைமை என்றும்
அதுவே தங்கள் கடமை என்றும் உணருங்கள்.
வாழும் போது பதவிக்கு பேராசை கொண்டால்
உயிர்கொல்லி பேதமற்று விரைந்து செயற்படும்
உயிர் என்ற ரீதியில் உணர்வுக்கு மதிப்பளித்து
உயிர்கொல்லி அச்சமற்று அதனை
அடியோடு வீழ்த்தி உறவுகளோடு இனணந்திடுங்கள்

பேதம் பார்பது இச்சமயத்திலுமா?
நிவாரணத்திற்க்கு அடிபடும்
மனிதர்களை கொண்டு  அவர்களின்
உயிர்களை நிவாரணம் வாங்குகின்றனர்
இதனை உணராமல் இருக்கின்றார்களே மானிடர்கள்
மக்கள் நலனே அரசின் நலன்
அதனை உணர்ந்தாலே ஆட்சியின் பலம்


சந்தோசமாய் இங்கு பொய் உரைக்கவில்லை நான்
உண்மையன்றி சொன்னதில் ஏதுமில்லை
உணர்வுகளின் உணர்வாய்
உணர்வை பகிர்ந்து கொண்டேன்
நம் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று

நலமாக வாழ வேண்டும் என்பது
என் மனதிலும் அவா
இதனை சொல்லும் என் மனதிலும் கண்டெடுத்து
படிப்வர்களின் மனங்களும் சோகம்
இத்தனை சோகமும் எதனால் வந்தது
உயிரை கொல்லும் என தெரிந்தும்
உலாவிய மனிதர்களால்
இத்தனை சோகத்திலும் ஓர் உயிருக்கு சந்தோசம்
அதுவே கொரோனா
இதனிலிருந்து மீள்வதே நம்மக்களுக்கு சந்தோசம்

“பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருப்போம்”
கொரோனாவை வெல்வோம்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க