சுக்கு மிளகு திப்பிலி

0
3347

மூலிகையின் பெயர்: திரிகடுகம்(சுக்கு)

சுக்கு: உலர்ந்த இஞ்சியே “சுக்கு” (இலங்கையின் சில பகுதிகளில்: வேர்க் கொம்பு) என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. இதன் மேன்மையை “சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழியின் மூலம் அறியலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகும்.

மருத்துவப் பயன்கள்:
  • சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.
  • சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.
  • சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
  • சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.
  • சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
  • சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
பயன்கள்:
  • சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
  • சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
  • சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

பயன்படுத்தும் முறைகள்: பித்தம் அகற்றும். வாயுத்தொல்லையை வேரறுக்கும். அஜீரணத்தைப் போக்கும். வலி அகற்றி, மாந்தம் மாய்க்கும். மலக்குடல் கிருமிகளை அழிக்கும். சளியைக் குணப்படுத்தும். மூட்டுவலியை மொத்தமாய் ஓட்டும். வாதமகற்றி.

பழமொழி:

  • சுக்குக்குமிஞ்சிய வைத்தியமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை என்பது தொன்று தொட்டு வழங்கும் பழமொழியாகும்.
Sukku

மூலிகையின் பெயர்: திரிகடுகம்(மிளகு)

மிளகு: (பைப்பர் நிக்ரம்) என்பது ‘பைப்பரேசியே’ என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த , பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமாகும். இதில் மிளகு மற்றும் வால் மிளகு என இரு வகை உண்டு. ‘மிளகு’ என இத்தாவரத்தின் பெயரிலே குறிக்கப்படும் இதன் சிறுகனிகள், உலர வைக்கப்பட்டு நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும், உணவின் சுவைகூட்டும் பொருளாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.

மிளகில்,அது பதப்படுத்தப்படும் முறைக்கேற்ப கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு எனப் பலவகை உண்டு. மிளகுக் கொடியின் பிறப்பிடம் தென்னிந்தியா ஆகும். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது. மிளகின் வேறு பெயர்கள்- மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம். தென்னிந்திய மொழிகளில் இத்தாவரம் தமிழில் மிளகு எனவும், அழைக்கப்படுகிறது.

மிளகின் காரத்தன்மை அதிலுள்ள பெப்பரைன் என்ற வேதிப்பொருளால் எற்படுவதாகும். பொடியாக்கப்பட்ட மிளகை உலகின் பெரும்பான்மையான நாடுகளில், சமையலறைகளிலும், உணவு உண்ணும் மேசைகளிலும் காணலாம். மிளகின் கொடி, இலை மற்றும் வேர் முதலியன பயன் தரும் பாகங்களாகும்.

மருத்துவப் பயன்கள்:
  • கல்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின், தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் உள்ளன.
  • மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
  • சளி, கோழை, இருமல் நீக்குவதற்கும் நச்சு முறிவு மருந்தாகவும் மிளகு பயன்படுகிறது.
  • மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.
  • உடலில் உண்டாகும் காய்ச்சலைப் போக்கும் தன்மை உடையது
பயன்கள்:
  • இது காரமும் மணமும் உடையது. உணவைச் செரிக்க வைப்பது.
  • உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க வல்லது.
  • ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்க உதவுவது.
  • வாய்வை கட்டுப்படுத்துகிறது.
  • தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.
  • அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.
 
Milagu

மிளகு வகைகள்:

  • கருமிளகு
  • வெண்மிளகு
  • பச்சை மிளகு
  • சிவப்பு மிளக

பயன்கள்: பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மூலிகையின் பெயர்: திரிகடுகம்(திப்பிலி)

திப்பிலி: இத்தாவரம் ஒரு பூக்கும் கொடி ஆகும்.இது ஒரு மூலிகைத் தாவரமாகும். அதன் பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது, பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படும். கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை மிளகு பெறப்படும், தனது நெருங்கிய இனமான கரும்மிளகை ஒத்த சுவையோடும், அதைக்காட்டிலும் மேலும் காரமாவும் இருக்கும்.

திப்பிலி மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும். கரும்மிளகை போல், பலமான காரம் கொண்ட பழங்களில், காரமூட்டும் நைட்ரோஜென் அணுக்கள் கொண்ட முலக்கூறான காரப்போலியை  கொண்டிருக்கும். திப்பிலி ஜாவா, இந்தோனேஷியாவை தாயகமாகக் கொண்டது.

மருத்துவப் பயன்கள்:
  • திப்பிலி இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும், குடல் வாயுவைப் போக்கும் சத்து மருந்தாகும். மூக்குப்பொடி தயாரிக்கவும் பயன்படுகின்றது.
  • திப்பிலி வாத நோய்களைக் குணப்படுத்தும். வயிற்று உப்புசத்திற்கான மருந்தாக, செரியாமை மருத்துவத்திலும் பயன்படுகின்றது. திப்பிலி இலைகள், பழங்கள் ஆகியவற்றின் நோய் எதிர்ப்புத் திறன் பரிசோதனைகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பயன்கள்: இந்தச் செடியிலிருந்து கிடைக்கும் மிளகு கொல்கத்தாவிலிருந்து ஏற்றுமதியாகிறது. திப்பிலிச் செடியில் இருந்து எடுக்கப்பட்ட வேர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ட திப்பிலி’ என்ற மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது. கனிகள், முதிராத பூக்கதிர்த் தண்டை உலர்த்தி ‘அரிசித் திப்பிலி’ என்ற பெயருடன் மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். திப்பிலி பண்டைக் காலம் தொட்டே இருமல், காசநோய், தொண்டைக்கட்டு, காய்ச்சல், கோழை, சளி முதலிய நோய்களைக் குணமாக்கப் பயன்படும் மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சேர்ந்ததே திரிகடுகம் என்னும் மருந்தாகும்.

Thippili
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க