சன்னா தால் ஃப்ரை (Chana Dhal Fry)

0
1136

தேவையான பொருட்கள் :

கொண்டைக்கடலை – 200 கிராம்

சமையல் சோடா – ஒரு சிட்டிகை

மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

உப்பு – சிறிதளவு

நன்மைகள்: கொழுப்பைக்  குறைக்கும் கொண்டைக்கடலை. உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் பெரும் பங்கு வகிக்கின்றது. உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது.

செய்முறை:

  • கொண்டைக்கடலையைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி,  நிழலில் உலர்த்தவும்.
  • உலர்ந்த பிறகு கொண்டைக்கடலையை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

நன்மைகள் :  சன்னா சத்தானது. குழந்தைகளுக்கு விருப்பமானது. 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க