இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 08)

0
939
 *பகுதி 08* 
 
[ முதல்ல இருவர் அறிமுகம் அவங்க திருமணம் என்ற விஷங்கள பாத்துடு பிறகு கதைக்கு வருவோம் வாசகர்களே! ]
 
ராஜேஷ் ஒரு மிடில் க்ளாஸ் பெமிலிய சேர்ந்தவன். ஒரு அக்கா இரண்டு தங்கச்சிங்க இருந்தாலும் வீட்டுல இவன் மட்டும் தான் ஆண்பிள்ளை என்றபடியால அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டான். கஷ்டம் என்றால் என்ன என்று கூட தெரிந்து கொள்ளாத அளவிற்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தான். கம்பியூட்டர் எஞ்சினியரிங் முடிச்சி இருந்தாலும் படிச்சிட்டு வெட்டியா ஊர் சுத்திட்டு திரியிரவரு தான் சார். கல்யாணத்துக்கப்புறம் தான் வேலய பத்தி யோசிக்கிற என்ற பொலிஸியில வாழ்ந்துட்டு இருந்தவரு. 
 
பவித்ரா ஆறு பெண் பிள்ளைகளுக்கு அக்காவாகப் பிறந்தவள். பவித்ரா படிப்பில் கெட்டிக்காரி என்றாலும் குடும்பம் விவசாய குடும்பம் என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல அவள தொடந்தும் படிக்க வைக்க முடியல. 
 
கல்யாணத்துக்கப்புறம் தான் தொழில் தோடுவன் என்றிருந்த ராஜேஷ அவன் எப்படியாவது திருந்த வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து வைக்க நாடி பல இடங்களில் அவன் படிப்புக்கு ஏற்ற சீர்வரிசையுடன் பெண் தேடினர் அவன் பெற்றோர். என்ன தான் படிச்சும் வேல இல்லாதவனுக்கு எங்க பணக்கார இடத்துப் பெண்ண பாத்து கல்யாணம் பண்ணிவைக்க முடியும். கடசியில சுனாமியால பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடு என்ட பெயருல கட்டிக் கொடுக்கப்பட் இரண்டறை வீட்டுடன் வந்து சேர்ந்தால் பவித்ரா. அவளை திருமணம் செய்த பின் ராஜேஷில் பல மாற்றங்கள் ஏற்படவே செய்தது. அது தான் அவன் அப்படிப் பேசக் காரணம்.
[ சரி வாசகர்களே இனி கதைக்கு வருவோம்]
 
தனது  கணவன் “நீ மட்டும் என் வாழ்க்கைல வராம  இருந்த இந்த ராஜேஷ் எதுக்குமே லாயக் இல்லாதவனா இருந்திருப்பன் ” 
என்று கூறியதைக் கேட்ட பவித்ரா 
 
“என்ன பேச்சு பேசுறிங்க என் கணவர் எப்படிப் பட்டவர் என்று உங்கள விட எனக்கு நல்லாவே தெரியும் மிஸ்டர் ராஜேஷ்!” என மிடுக்குடன் கூற
“எஸ் டீ மை டியர் வைப் உன் ஹஸ்பன்ட் ரொம்ப பெரிய ஆளுதான். ஆனா அவனுக்குக் கிடைச்சிருக்கிற அதிஷ்ட தேவதை அவன விட பெரியவள். என்று கண்களில் மின்மினிகள் மின்ன கூறும் போது அவள் தலை குணிந்தவாரே போதும் என்று கூறினாள்.
 
தன் மனைவியை தான் புகழ்வதை மனைவியே வேண்டாம் என்றாலும் நிறுத்துபவனா ரஜேஷ். சட்டென்று  “ஆ…..! அது எப்படி? நான் என் மனைவியை அவ்வளவு லேசில விடலாமா என்ன? ” என்று கூறியவன் இன்னும் ஆறே மாசத்துல நான் என் பொன்டாடிய எப்படி மாத்தப் போறன் தெரியுமா? அவளுக்கு பட்டுப்புடவ இருபத்து நான்கு கடர்ல செஞ்ச நக எல்லாம் போட்டு அழகு பார்க்கப் போறன் ” என்று கூறி ஏதோ கனவில் மூழ்கிப்போன அவனை 
“ஹ்ம்…… பகல் கனவு காணவேண்டாம் ” என்றாள் பவித்ரா.
 
யாரும்மா பகல் கனவு கண்ட என்டு சொன்ன, இப்ப டைம் எத்தன என்டு பாத்தியா மணி எட்டு ஆகுது. இது இராக் கனவு என்ன ஒன்டு  எல்லாரும் தூக்கத்துல கனவு காணுவாங் நான் முழிச்சுட்டு கனவு காண்றன். அதுவும் என் பொன்டாட்டியப் பத்தி என்று கண் சிமிட்டிக் கொண்டே கூற இருவரும் வாய் விட்டு சிரித்தனர்.
 
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜேஷுக்கு ஏதோ ஒன்று தோன்ற 
“ஆமா ராஜா எங்க?”  என்று கேட்டான் அவன். 
” அத ஏன்க கேட்குறிங்க? மதியமானதுல இருந்து அப்பா எப்ப வருவாறு?  அப்பா எப்ப வருவாறு?  என்று கேட்டுக் கேட்டே என்ன ஒரு வழி பண்ணிட்டான். நீங்க வாரத்துக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தூங்க வெச்சன் ” என்று கூறினாள் பவித்ரா.
 
தூக்கத்தில் இவர்கள் பேசிக் கொண்டிருந்தது இலேசாகக் கேட்க அப்பா வந்திருப்பதை உணர்ந்த ராஜா அப்பாவைக் காண வந்தான். தன் முன் வந்திருந்த மகனை பெரிய ஆவலுடன் அள்ளியெடுத்த அவன் 
“பவி! நம்ம பையன நாம பெரிய வேர்ல்ட் பேமஸ் ஆன ஸ்கூல்ல சேர்க்கனும். அவன நல்ல படியா படிக்க வெச்சி ராஜா மாதிரி வாழவைக்கனும்” என்று கூற
 
பவித்ரா வறுமையினால் பக்குவப்பட்டவள் அல்லவா? ராஜா மாதிரி வளர்ப்பதெல்லாம் சரி ஆனா ஓவர் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டால் அவனும் உங்களைப் போன்று திருமணத்திற்கு முன் ஊர் சுற்றும் வாலிபனாகி விடுவானே என்று கூற நினைத்தவள் அப்போதும் தன் கணவனை விட்டுக்கொடுக்க நினைக்காது மௌனம் சாதித்தாள். 
 
தொடரும்…
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க