வெள்ளை மனம்

0
1268
Screenshot_20200526-012244_Google

கண்ட கனவெல்லாம்
கண்ணெதிரே வந்து நிற்க
பெற்றெடுத்த பெருந்தகைக்கு
பெருமை சாே்க்கும்
வெள்ளை மனம்

கள்ளங் கபடமில்லை
களவாடத் தெரிவதில்லை
நேர்மையாய் உழைத்தின்று
நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம்


சூது வாது கிடையாது
சூழ்ச்சிகளும் அறவே தொியாது
சுயநலமும் இல்லாது
சுற்றம் மதித்து வாழும்
வெள்ளை மனம்

ஊழல்களைக் கண்டறிந்து
ஊக்கத்துடன் ஆக்கம் படைத்து
சத்தியத்தை நிலை நாட்டி
சமாதானம் வளர்த்திடும்
வெள்ளை மனம்

தோல்வியில் மனந்தளராமல்
தாேழனாய் தாேள் காெடுக்கும்
சாேதனை சூழ்ந்திடா வண்ணம்
சாேம்பலை விட்டாெழிக்கும்
வெள்ளை மனம்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க