விலா எலும்பின் சித்திரமே!!!

0
1177

விலா எலும்பின் சித்திரம் நீ.. 
முத்தை விட விசித்திரம் நீ !!! 
சுவாசிக்கும் வேளையிலும்
சுகந்தமாய் உனை ரசிப்பேன்

வெண்பனியால் உன் பெயர்
செவ்வானில் எழுதி வைப்பேன் 
நெஞ்சோர  நினைவுகளை
நிலவில் கூட சேர்த்து வைப்பேன்

விண்மீன்கள் வழி பார்த்து
விழிபிதுங்கும் விம்பம் நீ                                                   
கற்சிலையும்  கவி பயிலும் – நீ
கண் துயிலும் கலை பார்த்து

உன் அன்பின் ஆழங்கள்
ஆழி யையும்  தாண்டுமே……!!!  
அன்னக்கிளி அன்பினிலே மூழ்கித்தான் போனேனே                              
கன்னக்குழி சிரிப்பினிலே  சிக்குண்டும் போனேனே        

தெத்துப் பல்லழகியே
தெகிட்டாத தேன் அமுதே!!!  
என் வளைவில் பிறந்திட்ட விலா எலும்பே!!   
என்ன தவம் நான் செய்தேன்  
உன்னுடனே நானும் வர…

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க