வாழ்ந்து பார்

0
1487

கனவுகளும் காயங்களும்
இரண்டற  கலந்தது தான் வாழ்க்கை
வாழத் தெரிந்தவனுக்கு
சவால்!
வாழ முடியாதவன் கோழையாகிறான்
முட்கள் வலிக்கும் என்று 
ரோஜாவை யாரும்
பறிக்காமல் இருப்பதில்லை
வலிகள்  வேண்டாமென்றால்
வாழ்வையும் செதுக்க முடியாது
துடுப்பில்லா படகு என்று 
துவண்டு விடாதே!
உன்  நம்பிக்கையை
துடுப்பாய் மாற்றி
நீண்டதோர் பயணம் செய் 
வாழ்ந்து  விட்டு  செல்லாதே
வரலாற்றை விட்டுச் செல்
உன்னை
வாழ்த்துவதற்காக அல்ல
உன்னைக் கண்டு வாழ்வதற்காக
மெழுகாய் உருகுவதனால்
மானிடம் தோற்று போவதில்லை
மாறாக
உன் ஒளியில்
மற்றவரும் வாழலாம் என்று
நினை
எதிர்த்து  போராடு
எதிராக  எது வந்தாலும்
வாழ்வின் யதார்த்தமும்
அது தான்
வாழ்ந்து பார்  உன் வாழ்வை
தலை குனிந்தோர் முன்
தலை நிமிர்ந்து நில்
தன் மானத்திற்காக அல்ல
உன்னாலும்
வாழ முடியும் என்பதற்காக
நீ வாழ்வது தான்  வாழ்க்கை….

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க