வாழ்ந்திடு மனிதா…

0
1251
நிறைபொருள் 
இல்லை…
நிலையற்ற 
இவ்வாழ்வில்…
நிறைவாக 
தேடிடு…
நிலையான
உனை மட்டும்…
கவலைகள்
தடையல்ல…
கண்ணீரும் 
மருந்தல்ல…
கலங்காமல்
வாழ்ந்திடு…
கரைகள்
சேர்ந்திட…
நேற்றைய
விதிகள் யாவும்…
நாளைய 
உரங்கள் ஆகும்…
இன்றே
வென்றிடு…
இனிதொரு
உலகம் செய்திடு…
திருப்பங்கள்
உண்டு
உன் வாழ்விலும்…
பிழைகள் 
திருத்தி 
நீ வாழ்ந்தால்…
திருந்தி வாழ்ந்திடு…
விரும்பி வாழ்ந்திடு…
வாழ்ந்திடு மனிதா…
வாழ்க்கை 
உனக்கானதாகும்…
 
0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க