வாழ்க்கை

0
774

காலச் சுமை இறக்கிய
கனரக வண்டிகள்
ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டு
காலம் கடத்துகிறது

தனித்திருத்தலும் சுமைதான்
சேர்த்திருத்தலும் சுமைதான்
சுமைதான் வாழ்க்கையாகிறது
எதையும் இறக்கி வைக்க

இடம் கொடாத இதயம்
ஏற்றிக் கொள்வதில்த்தான்
காலம் கடத்துகிறது
மூச்சை ஏற்றி இறக்கி

மூட்டை சுமக்கும் வாழ்க்கையை
காலம் இறக்கி வைத்து
பிறர் சுமக்க வைக்கிறது
அதுவரைதான் ஆடிய வாழ்க்கை
அடக்கமாய் ஆறடி நிலத்துள்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க