வழிகாட்டி

0
3626

இலக்கு என்னும் வழிகாட்டி
இல்லத்தில் அன்னை தந்தை
இனிப்பான கல்விக்கு வழிகாட்டி
இறைக்கு இணையான குரு

வீதியில் நல்ல வழிகாட்டி
விபத்தை விலக்கும் குறியீடு
நீதிநெறி நேர்மை வழிகாட்டி
நின்ற மாமறை நூல்கள்
வாழ்வுக்கு நல்ல வழிகாட்டி
வாழ்ந்து மறைந்த மாமேதைகள்
வாழும் நாள்முடிவில் வழிகாட்டி
வாழ்வு தந்த அனுபவம்

தூய்மைத் தமிழுக்கு வழிகாட்டி
தொன்மை மிகும் நூல்கள்
தொலைந்த தமிழ் தேடலுக்கு வழிகாட்டி
தொல் காப்பியமெனும் ஓலை
பண்படுத்த மனதின் வழிகாட்டி
பழமைத் தமிழ் நூல்கள்
அன்பாகும் நல்ல வழிகாட்டி
ஆருயிர் உங்கள் நண்பன்

வெளிச்சம் நல்ல வழிகாட்டி
இரவின் பாதை செல்ல
துணிச்சல் நல்ல வழிகாட்டி
தோன்றும் துயர் துடைக்க
உணர்ந்தால் உலகே வழிகாட்டி
உன்னத வாழ்வை வாழ்வதற்கு
கலகமும் நல்ல வழிகாட்டியேதான்
வழி பிறந்து பாதைவிடுவதற்கு

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க