யாவும் கற்பனையே

0
700
FB_IMG_1595488426771

 

 

 

 

 

பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை………
யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி  ஒன்டு செத்தவீட்டில கிழவியல் வைக்கிற ஒப்பாரிய விட கேவலமா கத்திற்று இருந்திச்சு.ஏற்கனவே கடுப்பில இருந்த என்ன அந்த சத்தம் இன்னும் கோபக்காரி ஆக்கிச்சு.  சின்னனில படிச்ச தியானத்த வைச்சு ஒருமாதிரி கோபத்தை அடக்கிற்றன்.எப்படியாவது இன்டைக்கு இரவு காட்டிலதான் தங்கியாகனும்.வரேக்க சாப்பிட்ட snacks இன்னமும் செமிக்காம வயித்துக்குள்ள ஒரு தாண்டவமே ஆடிற்று இருந்தது.அதால சாப்பாட்ட பற்றி கவலை இல்லை. மரமேறி எண்டு  பட்டம் எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறதால இரவு மரத்தில ஏறி படுத்திரலாம்.எல்லாம் ok தான் ஆனா நித்திர கொள்ளும் வரைக்கும் பொழுதுபோகனும். ரோசத்தில போனையும் விட்டுட்டு வந்திற்றன். கொண்டுவந்திருந்தா வாடா பில்லேடா  பாட்டெண்டாலும் பாத்திருப்பன்.சரி எனி என்ன செய்யிறது.இங்கினேக்க எதும் அம்பிட்டா அதுகளோட  அலட்டிற்று இருக்கலாம்.

என்ர ஆந்தகண்ணால அங்கையும் இங்கையும் பாத்தா முதலாவதா மாட்டினவர் மயில்தான்.நான் பண்ணின அலப்பறையில அக்கா!!!!! என்ன விட்டிருங்க எண்டு கெஞ்சத்தொடங்கிற்று.சரி விடுறன் ஆனா நீ ஒரு குத்து டான்ஸ் ஆடணும் எண்டு கட்டளையப்போட்டன்.சரிக்கா பாட்ட படிங்க ஆடுறன் எண்டு ஆடிற்றே சொல்லிச்சு.  “பல்லவி எல்லாம் வராது சரணம் மட்டும் படிக்கிறன் ஆடிற்று திரும்பிப்பாக்காம ஓடிரு எண்டு உரத்த தொனியில சொன்னதப்பாத்து பயந்திற்றுப்போல.கராத்தே கறுப்பு வெலிற் எடுத்திருக்குமோ என்னவோ சடக்கெண்டு செட்டையமடிச்சு ஒரு கும்பிடு போட்டிச்சு.    நான் பாட அது ஆட காடே திருவிழாதான் .basic ஆ நான் ரம்ஸ் பிளேயர் எண்டதால சவுண்டெல்லாம் கைல கிடைக்கிறதுகள வைச்சே போட்டிருவன்.அமைதியா இருந்த காட்டில நான் போட்ட  music   அ கேட்டிற்று தவமணி வந்துட்டார் எண்டு நினைச்சோண்டு பறவைகள், மிருகங்கள் எல்லாம் வருது என்னப்பாக்க.எனக்கா ஒரே புழுகம்.  இதுகள வைச்சு எப்பிடியும் இரவபோக்காட்டிரலாம்.


முதலாவதா வந்தவனப்பாக்க பயமாத்தான் இருந்தது.பயத்த காட்டினா ஏறிமிதிச்சிருவாங்கள்.நல்ல ஸ்ரடியா நிமிந்து இருந்தன்.பயபுள்ள இங்கிலீஸ் மீடியம்போல கைய நீட்டி ஐ ஆம் லயன். ஹாய், ஹலோ ஹவ் ஆர் யூ? எண்டான். எத்தின விளம்பரம் பாத்திருப்பன். இவங்கள நம்பி கைய குடுத்தா கொரோனா வ பரப்பிவிட்டிருவாங்கள்.என்னால 14 நாள் தனிய எல்லாம் இருக்கேலாது அதால கைய குடுக்காம ஐ ஆம் (f)பைன் எண்டு ஒற்றவார்த்தைல முடிச்சிற்றன். டீசன்ட் தெரியாத பிள்ளையெண்டு நினைச்சா நினைக்கட்டும் நமக்கு நம்ம சேப்ரி தான் முக்கியம்.
எல்லாரும் வந்தாச்சு ஆரம்பிக்கலாம் எண்டு ஒரு சத்தமுங்க.எனக்கு ஓடர் போடுறதுக்கு நீ யார் எண்டு கேட்டுட்டு திரும்பிப்பாத்தா ஒரு ஆட்டுக்குட்டி. முந்தநாள் தான் பிறந்திருக்கு எண்டத தொப்பிள் கொடி சொல்லாம சொல்லிச்சு.பெட்டக்குட்டி தான் எண்டாலும் நல்ல வாட்ட சாட்டமா நிக்குது.அத பாத்தா பேச மனம் வருமா.வாடி என் தங்கம் எண்டு கூப்பிட்டு மடில இருத்திற்றன்.இருத்தினதுதான் தாமதம் இன்னும் ஒரு குட்டி பக்கத்த வந்து நிக்குது.கேட்டா நாங்கள் ருவின்ஸ் எண்டுது.சரி சரி ரெண்டுபேரும் சமாளிச்சு இருங்கோ எண்டு சொல்லிப்போட்டு நான் மரக்குச்சிய எடுத்தன்.  இப்ப எதுக்கு நீ மரக்குச்சிய  எடுக்கிறாய் எண்டு நீங்க கேக்காதீங்க.நானே சொல்லுறன்.சன் சிங்கர் ரைற்றில் வின் பண்ணினபிறகு மைக் இல்லாம பாடேலாம கிடக்கு.மைக்க வைச்சே பாடிப்பழகிற்றன்.அதாலதான் இந்த மரத்தடிய மைக்கா நினைச்சு கைல பிடிச்சோண்டு பாடப்போறன்.நீங்க யோசிக்கிறதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிற்று இருந்தா இண்டைக்கு பாடேலாது அதால பாடிமுடிக்கும் மட்டும் எனக்கு கரச்சல் தராம ஒரு ஓரமா இருந்து பாட்ட கேளுங்கோ.  

முதல்ல பாடுற பாட்டு பக்திப்பாட்டாத்தானே இருக்கணும். அதாலதான்    “உருக்கியோ நட்சத்திரத் தூறல் தூறல்.கிறக்கியோ என் அழகின் சாரல் சாரல்…..பொறுக்கி மினுக்கி செதிக்கிப் பதித்த மூரல்…மூரல்…..” எண்ட பாட்டில தொடங்கினன்.பாட்டுக்கு நல்ல வரவேற்பு.இவங்கள்ட கைதட்டலப்பாத்த நான் போகேக்க பொன்னாடை போத்துதான் விடுவாங்கள் போல.அடுத்த பாட்டு தொடங்கிறதுக்கு முதல் இஞ்சிபிளேன்றியோட ஒரு முயல் வந்திச்சு.ஏதோ கற்வோக்ல நடக்கிறமாதிரி ஸ்ரைலாத்தான் வந்தது.நான் வைச்ச கண் வாங்காம பாத்திற்றே இருந்தன் அந்த முயல இல்ல அது கொண்டு வந்த பிளேன்ரீய.சும்மா சொல்லக்கூடாது மிருகங்கள்ட கைப்பக்குவமே தனி.இந்த பிளேன்றியோட ஒரு மியூசிக் அல்பம் வெளியிட்டிரலாம் போல.அவளவு  உற்சாகமா இருந்திச்சு.பழையபடி கச்சேரி தொடங்கிச்சு.   

ரோமியோ ஆட்டம்போட்டா சுத்தும் பூமி சுத்தாதே.  அய்யகோ குண்டுசட்டியில் குதிரை ஓட்டக்கூடாதே….நான் பாடின அளவுக்கு இல்ல எண்டாலும் பிரபுதேவா மாஸ்டர் லெவலுக்கு மான் குட்டியள்ட குரூப்டான்ஸ் இருந்திச்சு.இப்பிடியே தல,தளபதி லிட்டில்ஸ்ரார்,சூப்பர் ஸ்டார்,மக்கள் செல்வன் எல்லார்ட பாட்டையும் ஒரு கர கண்டுட்டன்.
 பாட்டில ஒரு குறையும் இருக்காது எண்டுதான் நினைச்சன்.ஆனா 5அறிவுக்காறங்கள் அலேட்டாத்தான் இருந்திருக்காங்கள்.எல்லாரும் கோறஸ்சில வீ வோன்ற் கானா வீ வோன்ற் கானா..எண்டு கத்தவெளிக்கிட்டாங்கள்.மனுசங்கள் எண்டா என்ர வீக்கினச சொல்லி விளங்கப்படுத்தலாம்.இவங்களுக்கு என்ர பிரச்சனை எங்க விளங்கப்போது எண்டு அந்த விசயத்த சொல்லாமலே விட்டுட்டன்.இப்ப உங்களுக்கு ஆர்வமா இருக்குமே அந்த வீக்னஸ் என்னண்டு தெரியணுமெண்டு.உங்களுக்கும் சொல்லமாட்டன் தெரிஞ்சா அத வைச்சு என்ன மடக்கிருவியள்.

சரி….. ஒரு கானாவ படிச்சு அவங்கள கவுத்திரலாம் எண்டு ரென்டிங் லிஸ்ரில இருக்கிற பாட்டொண்ட எடுத்துவிட்டன்.  கொரோனா வைரஸ் வந்திருச்சு நம்ம கிட்டதான்………சரவெடிசரன் அண்ணா பாடின அளவுக்கு இல்லையெண்டாலும் நல்லாத்தான் பாடியிருக்கன் எண்டது இவைட பிற்பாட்டிலையே விளங்கிற்று.பாட்டு முடியவும் லேசா வெளிச்சம் கண்ணில பட்டு கண் கூச தொடங்கிற்று. அப்பத்தான் விளங்கிச்சு விடிஞ்சுபோச்செண்டு.மரங்களுக்கு இடையால  வந்த பொட்டு வெயில் பட்டு   என்ட மொடேன் ரெஸ் கூட வெக்கத்தில சிவந்திற்று.இன்னும் கொஞ்ச நேரத்தில எனக்கு அவார்ட் எல்லாம் கிடைச்சிரும்.சோசியல்மீடியா ல என்னப்பற்றி தான் ஒரே பேச்சா இருக்கப்போது.நிறைய interview எல்லாம் குடுக்கவேனும்.ரீவீல போகேக்க முகம் பளிச்செண்டு தெரியோணும். அப்ப கட்டாயம் ஒரு கோல்டன் பேசியல் செய்யணும்.எப்பிடியும் கைகாலுகள சூம் பண்ணி காட்டுவாங்கள் அதால   manicure ,pedicure ரெண்டையும் மறக்காம செய்யணும்.இவளவும் செய்றதுக்கு  எப்பிடியும் 10000 வேணும்.காசெல்லாம் எனக்கு ஒரு மேற்றரே இல்ல.நீங்க நம்புறிங்களோ தெரியாது நான் பிறக்கேக்கையே கோடிஸ்வரியாம்.என்ன பற்றி நானே சொல்லுறது நல்லா இருக்காது அதால ஒரு Web site  சொல்லுறன் note பண்ணிக்கோங்க.  Https:/www.cckkkodeswari.lk.
இந்த கதைல நான் award வாங்கிறத மறந்திற்றன் கொஞ்சம் பொறுங்கோ அத முதல் வாங்கிற்று   வாறன்.
*The best Singer award goes to miss வர்ணமகள்
*Next we are inviting  miss வர்ணமகள் to get best musician award
*we all are very happy to give this award to miss வர்ணமகள் for best female Gana Singer.

தாங்கோ தாங்கோ எல்லா அவார்ட்டும் எனக்குத்தான்.ரெண்டு கையையும் நீட்டினன் award அ வாங்க.
அட சீ நாயே எழும்பு விடிஞ்சு எவளா நேரமாகுது இன்னும் பல்லுக்கூட தேய்க்காமா கல்லில குந்தின்னு இன்னா  செய்யுற.அடிங்கொப்பன் தாமரவரனில தல முழுக.இன்னா பாத்துன்னு நிக்கிற. ரேசன்கடையான்டப்போய் கொஞ்சூண்டு பருப்பு வாங்கிற்று வா.சாயங்காலம் கொப்பன் வேலையால வந்ததும் சல்லிய குடுத்துக்கலாம்.
(அப்ப இதுவும் கனவா?????)

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க