மிதிவண்டி ஓட்டுதல்

0
2797

மிதிவண்டி ஓட்டுதல் (அ) சைக்கிள் ஓட்டுதலை ஆங்கிலத்தில் சைக்கிளிங் என்று கூறுகின்றனர். மிதிவண்டி ஓட்டுதல் ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சி முறை. மிதிவண்டி ஓட்டுதல் குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள்என மிதிவண்டி ஓட்டத்  தெரிந்த அனைவராலும் செய்யத்தக்கது. மிதிவண்டி ஓட்டுதலின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், பிற பயிற்சிகள் செய்ய சிரமப்படும் மூட்டுவலி உடையோர் மற்றும் உடல் பருமனாக இருப்போர்கள் எளிதாக செய்ய கூடிய ஒன்றாக மிதிவண்டி ஓட்டுதல் உள்ளது. தற்போது மிதிவண்டி ஓட்டுதலை பல நாட்டு அரசாங்கமே போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காவும், காற்று மாசுபடுதலைக் குறைப்பதற்காகவும் மக்களிடம் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். இது மட்டுமின்றி மிதிவண்டி ஓட்டுதலின் மூலம் ஒரு நகரத்தின் (அ) கிராமத்தின் இயற்கை அழகை ரசிக்கவும் மற்றும் தூய்மையான காற்று கிடைக்கவும் உதவுகிறது. மிதிவண்டி ஓட்டுவதால் நமது போக்குவரத்து செலவையும் குறைக்கலாம்.

மிதிவண்டி ஓட்டுதலுக்கு முன்: மிதிவண்டி ஓட்டுதலுக்கு முன் மிதமான உணவு அல்லது குறைந்த அளவு தண்ணீர் எடுத்துக்  கொள்ள வேண்டும். அதிகமான உணவு (அ) தண்ணீர் எடுத்துக்கொள்வதால் வாந்தி வர வாய்ப்புகள் உண்டு. அதே போல் உணவு உண்ணாமல் மிதிவண்டி ஓட்டுவதனால் மயக்கம், அதிகக்  களைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதிவண்டி ஓட்டுதலுக்கு பொருத்தமான இடம்:

இயற்கைச் சூழலில் அமைந்த சாலைகள் (அ) அதிகமான வாகனங்கள் செல்லாத ஆபத்து இல்லாத  சாலைகளைத்  தேர்ந்தேடுப்பது நலம்.

ஏனெனில் அதிகமான வாகனங்கள் இல்லா  சாலைகளைத்  தேர்ந்தெடுப்பதன் மூலம் அதிகமான மாசு இல்லாமல் மேற்கொள்ளலாம். அதுமட்டுமின்றி மிதிவண்டியை வேகமாக ஓட்டவும் இயலும்.

மிதிவண்டி ஓட்டும் பொழுது மேற்கொள்ளும் முறைகள்: மிதிவண்டி ஓட்டுதல் தொடக்கத்தில் மிகவும் மெதுவாக மேற்கொள்ள வேண்டும். தொடக்கத்தில் 2-3 கிலோ மீட்டர் மட்டுமே பயிற்சி மேற்கொள்ளுங்கள். பயிற்சி அதிகரித்த பின் மித வேகமாகவும் அதிக தொலைவும் பயிற்சி மேற்கொள்ளலாம்.

 • கலோரி கணக்கீடு சராசரி ஆண் மற்றும் பெண் ஒரு மணி நேரம் மிதிவண்டி ஓட்டுதல் மூலம் எரிக்கபடும் கலோரிகள்:
 •  மிதிவண்டி ஓட்டுதல் 10-11.9 mph, மெதுவாக ஓட்டுவதனால் ஆ= 517 kcal, பெ = 444 kcal எரிக்கபடும்.
 • மிதிவண்டி ஓட்டுதல் 12-13.9 mph, மிதமாக ஓட்டுவதனால் ஆ= 689 kcal, பெ = 591 kcal எரிக்கபடும்.
 • மிதிவண்டி ஓட்டுதல் 14-15.9 mph, வேகமாக ஓட்டுவதனால் ஆ= 862 kcal, பெ = 739 kcal எரிக்கபடும்.
 • மிதிவண்டி ஓட்டுதல் 16-19 mph, மிக வேகமாக ஓட்டுவதனால் ஆ= 1,034 kcal, பெ= 887 kcal எரிக்கப்படும்.

 

 நன்மைகள்:

 

 • மிதிவண்டி தினமும் சில மைல்கள் ஓட்டுவதால் உறுதியான தசைகளைப் பெறுகிறோம்.
 • இரத்த ஓட்டம் சீராகச் செல்ல உதவுகிறது, மற்றும் இரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.
 • மிதிவண்டி ஓட்டுபவரின் மனவலிமை அதிகரிக்கிறது.
 • நம் உடலின் வெப்பத்தையும், கழிவுகளைவும் (வியர்வை) வெளியேற்ற உதவுகிறது.
 • உடல் பருமன் உடையோர் மிதிவண்டி ஓட்டுவதால் உறுதியான மற்றும் பருமன் இல்லா உடலை பெறலாம்.
 • உங்களது கோபம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்கி மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
 • மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கிறது.
 • மிதிவண்டி ஓட்டுதல்  மூலம் புற்றுநோய் மற்றும் நீரிழிவு
  நோயின் தாக்கம் குறையும். மிதிவண்டி ஓட்டுவதால் இதயநோய் ஆபத்தைக் குறைக்கிறது.

மிதிவண்டி ஓட்டுவதால் உங்களது உடல் நலம், மன நலம், பொருளாதர நலம் போன்ற மூன்று நலன்களை மேன்மைப்படுத்த முடியும். எனவே மிதிவண்டி ஓட்டுதலை நம் அன்றாட செயல்களில் சேர்த்து நமது உடல், மனம் மற்றும் பொருளாதர நலனை போற்றிப் பேணிக்காப்போம்.

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க