மறக்கவில்லை மனது

0
594
20200427_103819

விழி இருந்தும் குருடாகிறேன்
உன் வதனம் காணாமையால்
பேசத் தெரிந்தும் ஊமையாகிறேன்
உன்னுடன் பேசாமையால்……

உயிர்இருந்தும் உயிரற்று போகிறேன்
உன் மூச்சு நின்று போனதால்…..

தவமெனஉனை நான் நினைத்தேன்
சாபமென நீ நினைத்தாய்……

விடியல்கள் எனக்கு வெளிச்சம்தரவில்லை……
சூரியனும் என்னை சுடவில்லை
கொட்டும் பனிகூட கொடுமையில்லை….

உன் ஒற்றை வார்த்தை அத்தனையும் மொத்தமாய் செய்தது…….
பிரிவுகள் சகஜமானவை…..
பிரிவில் ஒரு நியாயம் வேண்டாமா????
பிடித்ததை சொல்ல முடிந்த உன்னால்
பிடிக்கவில்லை என சொல்ல முடியாதா?

கருத்ததான்றிப் போய் பிரிதல்
வருத்தமற்றவை…….
நிராகரிப்புகள் நியாயமற்றவையே…
என் நிஐத்தை அழிக்கின்றன…
தகுதியற்றவள்ஆக்கின…..
உன் மன ஊனம்
என்னை ஊனமாக்குகின்றது…..
விதியென்று நினைத்தாலும்….
உன் நினைவு சதி செய்து கொல்கிறது…

காதல் காமமாகும்முன்பே
உன் நினைவுகளை அழித்துவிடு…
விட்டு விட்டு பெய்யும் மழை போல
எனை கொல்கிறாய்……
மழை வேண்டாம்….
பாலைவனத்தில் வசிக்க ஒரு அனுைதி தா…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments