மனிதப்பூக்கள்

0
622

டொக்கு டொக்கு என்று
வெத்திலை இடிக்கும்
வேலு தாத்தாவில் எப்பவும்
கடுப்பாயிருக்கும் விச்சு
கடைக்கு போகையிலே
கேக்கிறான் இன்று
என்ன வேணும் எண்டு

பாட்டி கூப்பிட்டாலும்
காதுல விழாது போல்
ஸ்கூல் டியூசன் என
ஓடித் திரிந்த வாண்டுகள்
சுத்தி இருந்தபடி
சுவாரஸ்யமாய் கேக்குது
பாட்டி சொல்லும்
பாட்டி வடை சுட்ட கதை

எல்லைச்சண்டை பிடிக்கும்
செல்லம்மாக்கா
வேலிக்கு மேல
எட்டி கொடுக்கிறா
சுடச்சுட மீன்குழம்பு

கொடுக்கல் வாங்கலில்
கோபித்த கோமளாமாமி
கோப்பித்தூள் கேட்க
சிரிச்ச முகத்தோடே
கொடுக்கிறாள் ராணி

குப்பை விழுகுது என
குமுறியடித்த குமாரி ஆன்டி
அப்பம் சுட்டு அனுப்புகிறா

கிரிக்கெட் விளையாடும்
சுட்டி பசங்களை
துரத்தியடித்த
துரை அங்கிள்
பம்பரம் சுற்ற
கற்று தருகிறார்

கீரிமீன் கொடுத்து
கீரைக்கட்டு பெற்று
பண்டமாற்று நடக்குது
சப்பாரும் சங்கரும்
சண்டை பிடித்த
சந்தை கடைவீதியிலே

மனித நேயம் சாகவில்லை
மறுபடி துளிர்க்குது
இருபது இருபதில்
சொல்லிக் கொண்டே
சத்தமில்லாத வானிலே
செட்டையடித்து பறக்குது
செண்பக குருவி ஒன்று

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க