பௌர்ணமி

0
694

ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்
தாண்டிச் சென்றாலென்ன
நீயில்லாத என் வானில்
என்றென்றும் அமாவாசை தான்…
தேய்பிறையாய்த் தேய்ந்து
காணமலே போய்விடுவாய்
என்றறியாது வளர்பிறைக்
கனவுகள் வளர்த்தேன்…
நிலா வந்து போனதற்கு
வான்வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் நீ வந்த சுவடுகள்
நீங்கவில்லை நெஞ்சத்திலே…
பூத்த அல்லி சான்றுரைக்கும்
கண்ணாளன் வருகையை
கேட்கவில்லை உன் காதில் மட்டும்
என் இதய மலரின் விசும்பல்கள்…

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க