பொதுமை வேண்டும்

0
797
FB_IMG_1636893115765-d1fcf630

எல்லோரும்  இவ்வுலகில் இன்பங் காண

இருப்பவர்கள்உலகினுண்மை உணர  வேண்டும்

வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம்

வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும்

எல்லையை எழிலாக இனிதாய் வைத்து

இடரின்றி இருந்திடவே இயங்க  வேண்டும்

நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி

நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்!

நாள்த்தோறும் குறளினையேக்  கையில்  கொள்ள

நன்னெறிகள் நம்மிடையே நடனமிட வேண்டும்

நூல்த்தோறும் ஊர்ந்த்திட்டால் உலகி லெங்கும்

உண்மையாய் மனிதநேயம் உயர்ந்து நிற்கும்

சூல் கொண்டு சுறுசுறுப்பாய் இயங்கி விட்டால்

சுகமென்னும் பொதுமையிலே நீந்தி நிற்போம்

தொளகளெல்லாம்  ஒன்றிணைந்திட் டாலே நம்மில்

புது உலக வாழ்க்கையத்தில் மிதந்திடு வோமே!

பொதுக்கல்வி மாந்தர்க்கு  உரிமை யாக்கி

 புவியெங்கும் அறிவொளியும் பரவ வேண்டும்

பொதுநீதியின் வழித்தடங்கள் ஒளியா யாக்கி

புத்தாக்கம் கொண்டுவாராய்  விளங்க   வேண்டும்

உத்திட்ட தொழில்யாவும் பொதுமை யாக்கி

உயிர்களெல்லாம் உறவுகொண்டு வாழ வேண்டும்

போரற்ற உலகமாகத்  திகழ வேண்டும்

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க