பெண்களின் வெட்கம்

0
5390

பெண்களின் வெட்கம்
எண்ணிலடங்காத கற்பனை…!

மெல்லிய மயிலிறகின்
மென்மையான வருடலைப் போன்றது

ஒழிந்திருந்து ரசித்தால்
உடல் முழுக்க சிலிர்த்துவிடும்
ஒரு திருடனாகவே மாற்றிவிடும்!

பெண்களின் வெட்கம்
கவிதை எழுத கற்றுத்தரும்…
கவிஞனாகவே மாற்றிவிடும்!

விண்மீன்களுக்கு ஒப்பானது
வெண்ணிலவின் சாயல் ஒத்தது
மது அருந்தாமலே போதையாக்கிவிடும்

அளவுக்கு மிஞ்சினால்
அமுதம் மாத்திரமே நஞ்சாகும்
வெட்கம் இதிலடங்காது!

பெண்களின் வெட்கம்
ஆண்களால் மாத்திரமே அழகடையும்

திகட்டல்,
பெண்களின் வெட்கத்திற்கு முரண்!

சேமித்து வைத்தெல்லாம்
வெட்கத்தை ரசிக்க முடியாது

தோன்றலில்
பெண்களின் வெட்கம் பூப்படையும்!
தொடர்தலில்
பெண்களின் வெட்கம் வளைகாப்பு பூணும்!

தோய்தலோ, தேய்தலோ
பெண்களி வெட்கத்திற்கு கிடையாது
மூப்படையவும் தெரியாது

பெண்களின் வெட்கத்திற்கு
ஆண்கள்தான் சாட்சி!
கண்ணாடி பாதிதான் சொல்லும்
ஆண்கள்தான் மீதியை பூரணப்படுத்துவார்கள்…

பெண்களின் வெட்கம்
ஒட்டுமொத்த ஆண்களின் ஒருதலைக்
காதல்!

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க