‘பூச்செண்டு’

0
593

அவள் ஒரு பேரழகி
மொத்த அழகியலுக்கும் சொந்தக்காரி
புன்னகைக்க வேண்டிய இடத்தில்
உம்மென்று இருக்கும் குறும்புக்காரி
காரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளி
பஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்து
பாதம் கொண்டு நடக்கும்
பதுமைக்கிளி
சின்னக்கண்ணழகி
கொள்ளையிடும் முத்த ராட்சசி
அப்பழுக்கில்லாத பொம்மை
நம்மை தலையாட்ட வைக்கும்
சிருங்கார தேன்சிட்டு
மொத்தத்தில் அவள் ஒரு
கலப்படமற்ற
10 கிலோ பசும்பொன்
பார்ப்போரை அணைக்கத்தூண்டும்
வெள்ளை பூச்செண்டு

 

 

 

 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க