பிறவியின் மொழி

0
642
images (3)-1fdcf307

மானிடவியல் பிறவிண் உகந்தது தமிழ்
மண்ணில்  பிறப்பு வியப்பின் நிறைவே!
செல்லும் மொழியை பேசி நிறைவின்
தரணியில்மாற்றங்கள் நிலைகொண்டர்

ஏட்டில் எழுதி இலக்கியம் தமிழ் முத்தற்றே!
சான்றோர்கல்தொன்ற தமிழ் மொழியான!
ஆய்வின் தெளிவின் உலகமொழி யென!
கற்றோர் ஞானம் மண்ணில் நிறைவரை!

வேதமும் வேளாண்மை ஓங்கத் துவங்கிய
காலம் துவங்க எழுத்தும் துவங்க
ஆயிரம் ஆண்டு ஆண்டவர் ஆண்ட
ஆக்கத்தின் அத்தியாயம் ஆதியும் சிறந்து

மானிடவியல் மலர்ந்த ஆறுயிர்யுலகில்
மெய்ஞானம் உயிர் ஞானம் கலைஞானம்
வின்ஞானம்பொருள்ஞானம்சுவைஞானம்
குலஞானம் வாழ்வியல் துவக்கமென்றே!

எத்தனைவியப்பு இன்றலவுகாணாஞானம்
முற்காலத்துக் கலைநயம் யின்றில்லை
மாண்பு பண்பு அன்பு நட்பு காதல் கலை செழிப்புடன் வாழ்ந்த தமிழ் உலகவரலாறு

கல்வியின் சிறப்பு இலக்கிய நயங்கள்!
ஊர்ந்து மனதில் உயர்ந்து மண்ணில்
சொல்லின் வடிவம் பதித்தார் அழகர்
தமிழ் புலர்ந்தது மண்ணின் வரலாறு

அகத்தியம் எழுந்தருளிய தாயிலக்கிய மன
அகத்தியர் அருள்தந்த தொல்காப்பியம் யென
ஆய்வாளரின் முச்சங்கம்தமிழ்நூல் மென்பொருள் அமுதமாய் தொல்காப்பியம் மூலநூல்யென
காலம் கடந்து வளரக் கண்ட மண்ணில் கற்றோர் தமிழ்க் கல்வி விரிவடைந்து
காலத்தால் பொத்தகம் மலரச்செய்து
கல்வியின் அறிவுடையார் உலகப்புகழ்!

எட்டுத் தொகை பத்து பட்டு பதினெண்கிழ்
அகத்தியம் பன்னியிரு ஆயிரம் நுற்ப்பா
எழுத்து சொல் அரசியல் சோதிடம்
இயல்களை அடங்கியது அகத்தியம் யென

சான்றோர் மொழிக்குத் தந்த சிறப்பு
காலம் கடந்தாலும்  காவியங்கள்
இலக்கியங்கள் இளமையும் இன்றே
எட்டுதிசையும் சுடரொளியாய் தமிழ் திகழும் 

0 0 வாக்குகள்
இதை மதிப்பிடுங்கள்
இங்கே பதிவு செய்க
என் கருத்துக்கு
0 கருத்துரைகள்
பழமையான
புதியது அதிகம் வாக்களித்தனர்
இன்லைன் பின்னூட்டங்கள்
எல்லா கருத்துகளையும் காண்க